பரதேசியில் அதர்வாவை ஹீரோவாக்கியது ஏன்? பாலா பதில்!!
Page 1 of 1

அவன் இவன் படத்திற்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் பரதேசி , எரியும் பனிகாடு நாவலை மையப்படுத்தி இப்படத்தை படமாக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகிகளாக வேதிகா மற்றும் தன்சிகா நடித்துள்ளனர். சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மையப்படுத்தி பரதேசி படத்தை இயக்கியுள்ளார் பாலா. அதுமட்டுமின்றி 1940-களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(25.11.12) சென்னையில் நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் பெற்று கொண்டனர். ஆடியோ வெளியீட்டு விழாவை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டைரக்டர் பாலா பேசினார். அதன் விவரம் வருமாறு…
* இந்த படத்திற்கு பரதேசி என்று பெயர் வைத்தது ஏன்…?
பரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்களை பரதேசி என்று சொல்வார்கள். அதைத்தான் பிழைப்பு தேடி போகும் ஒருவனை இங்கு பரதேசி
கதையாகி உள்ளேன்.
* பரதேசியில் அதர்வாவை ஹீரோவாக்கியது ஏன்…?
இந்த படத்தின் கதைக்கு அவர் தான் பொருந்துவார் என்று நினைத்தேன். அதனால் அவரை ஹீரோவாக்கிவிட்டேன். அதுமட்டுமின்றி அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். சேது படத்திலேயே அதர்வாவின் அப்பாவும், மறைந்த நடிகருமான முரளியுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியது. ஆனால் அப்போது அது நடக்கவில்லை. இப்போது அவரது மகன் மூலம் நடந்தேறியுள்ளது.
* தங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் (சூர்யா, விக்ரம், ஆர்யா) போன்றவர்கள் பெரிய ஸ்டாராகிவிட, ஹீரோயின்கள் மட்டும் ஸ்டாராகவில்லையே அது ஏன்…?
அப்படி இல்லை சங்கீதா நல்ல நடிகையாக பெயர் எடுத்தாங்க. லைலாவும் அப்படித்தான். ஆனால் அவருக்கும், எனக்கும் லவ் என்று கதையை கட்டிவிட்டு அவரை விரட்டி விட்டுடீங்க. ஆனால் இந்தபடத்தில் நடித்துள்ள வேதிகா, தன்ஷிகா இருவருக்கும் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நம்புகிறேன்.
* டைரக்டர்கள் ஹீரோவாகும் எண்ணம் அதிகரிக்கிறது. தங்களுக்கு….?
இயக்குனர்கள் பலரும் நடிகர்களாகி வருகிறார்கள். ஆனால் எனக்கு அந்த எண்ணம் இல்லை. அந்த கொடுமையெல்லாம் நான் கொடுக்க மாட்டேன்.
* அவன் இவன் படத்திற்கு எழுந்த சர்ச்சை பற்றி…?
நான் இயக்கிய அவன் இவன் படத்திற்கு பெரும் விமர்சனம் எழுந்தது. அதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் பொருளாதார ரீதியில் அந்த படம் எல்லோரையும்
திருப்திபடுத்தியது.
* ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்றியது பற்றி…?
இந்த படத்தில் ஏன் ஜி.வி.பிரகாஷை பயன்படுத்தினேன் என்றால், என் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தது. அதாவது, பாலா எப்போதும், விக்ரம், சூர்யா இவர்களை வைத்து
தான் படம் எடுக்கிறார். இளையராஜாவை தான் இசை அமைக்க வைக்கிறார். அந்த குற்றச்சாட்டை மாற்றும் முயற்சியா தான் இந்த படத்துல ஒட்டு மொத்தமா புது டீம் வைத்து படத்தில் இறங்கினேன். படத்தை பாட்டும் நன்றாக வந்து இருக்கிறது. நீங்களும் கேட்டுவிட்டு சொல்லுங்க.
* வைரமுத்துவுடன் பணியாற்றிய அனுபவம்…?
படத்தை எடுத்துவிட்டு வைரமுத்துவிடம் போட்டு காட்டினேன். மூன்று நாளில் பாட்டு எழுதி பைல் எடுத்து நீட்டினார். அப்போது அவர் சொன்னார் இது ரத்தத்தில் எழுதிய பாட்டு எந்த வரியையும் நீக்காதீர்கள் என்று, எனக்கு உடனே கிண்டலாக தோன்றியது. ஏன் இவர் பேனாவில் மை எதுவும் தீர்ந்து போனதா? ஆனா அவர் சொன்ன மாதிரி ரத்தத்தில் தான் எழுதியிருந்தார். செங்காடு பாடல் பலராலும் கொண்டாடப்படும், அவரோடு வேலை பார்த்தது ஒரு நல்ல அனுபவம்.
நான் கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி. படத்தில் எப்போதும் சென்டிமென்ட்டா ஏதாவது சொல்வேன். இந்த படத்திலும் அந்த பாதிப்பு இருக்கும். எல்லோரும் டீ குடிப்போம், ஆனால் இனி இந்தபடத்தை பார்த்த பிறகு இனி 5 நிமிஷம் நாம் இதை பற்றி சிந்திப்போம். பரதேசி படத்தை டிசம்பர் 21ம் தேதி வெளியிட உள்ளேன். எங்களது குழுவுக்கும், எனக்கும் உங்கள் வாழ்த்துக்கள் தேவை என்று நன்றி கூறி முடித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்!
» பாலாவின் பரதேசியில் அதர்வா
» பரதேசியில் இருந்து பூஜா நீக்கம்
» பரதேசியில் பவரு ஏன் நடிக்கலை தெரியுமா?
» பரதேசியில் பூஜா இல்லை, தன்ஷிகாவாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum