அகத்தியர் கோவில்
Page 1 of 1
அகத்தியர் கோவில்
ஸ்தல வரலாறு....
மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பதை போல, குள்ளமாக இருந்தாலும் அகத்தியரின் அருள் சிறப்பு வாய்ந்தது. எங்கெல்லாம் அகத்தியர் இருந்து அருள்பாலிக்கிறாரோ, அங்கு சென்று வணங்கினால் நோய், நொடி தீரும் என்பது அனைவரின் நம்பிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒத்த தெருவில், அகத்தியருக்கு தனி கோவில் அமைந்துள்ளது.
21/2 அடி உயரத்தில், கருங்கல் விக்ரக மூலவராக காட்சியளிக்கும் அகத்தியர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது கையில் மருந்து குடுவையை தாங்கியுள்ளார். இதனால் இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு மருந்து குடுவையை தாங்கியிருக்கும் மருத்துவ அகத்தியர் நோய், நொடிகளை தீர்த்து வைக்கும் சிறந்த மருத்துவராக விளங்குகிறார்.
இந்த கோவிலில் அகத்திய முனிவருடன் அவரது மனைவி லோபாமுத்ரையும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அவரது பார்வை பக்தர்களின் உள்ளத்தை ஊடுருவும் விதமாக அமையப்பெற்றுள்ளது. மூலவர் சிலை போல, பஞ்சலோக உற்சவர் சிலையும் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள மூலவர் விக்ரகம், பல மகான்களால் வணங்கப்பட்டது என்றும், மிகவும் பழமை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. பவுர்ணமி தோறும் அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இந்த கோவில் பிரசாதமாக வழங்கப்படும் விபூதியை வியாதி நீக்கும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அகத்தியர் கோவில்
» திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலயம் (அகத்தியர் கோவில்) மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
» அகத்தியர் அகத்தியர்
» அகத்தியர் அகத்தியர்
» அகத்தியர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum