பத்மஸ்ரீ விருதுகளை சினிமா போஸ்டர்களில் பயன்படுத்தி அவமதிப்பு: நடிகர்கள் மோகன்பாபு, பிரமானந்தம் மீது வழக்கு
Page 1 of 1

நடிகர்கள் மோகன்பாபு, பிரமானந்தம் இருவரும் பத்மஸ்ரீ பட்டத்தை சினிமா போஸ்டர்களில் தங்கள் பெயருக்கு பின்னால் பயன்படுத்துவதாகவும், எனவே அவர்களிடம் இருந்து பத்மஸ்ரீ விருதுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மோகன்பாபு தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். 1974-ல் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.
மோகன்பாபுவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு 2007-ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது. பிரமானந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தமிழில் ‘மொழி’, ‘வானம்’, ‘பயணம்’, ‘சரோஜா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை இருவரும் போஸ்டர்களில் அச்சிட்டு அவமரியாதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர முன்னாள் பாரதீய ஜனதா கட்சி மந்திரி இந்திரசேனா ரெட்டி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
மோகன்பாபுவும், பிரமானந்தமும் பத்மஸ்ரீ விருதுகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். தயாரிப்பாளர் பத்மஸ்ரீ மோகன் பாபு என்றும், நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ பிரமானந்தம் என்றும் இருவரும் சினிமா போஸ்டர்களில் பட்டங்களை அச்சிட்டு கொள்கின்றனர்.
பத்மஸ்ரீ விருதுகளை இதுபோல் தங்கள் பெயர்களுக்கு பின்னால் பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதை மீறி இருவரும் பயன்படுத்துகின்றனர். எனவே மோகன்பாபு, பிரமானந்தத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்ய கோர்ட்டு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

» வைகைப் புயல் மீது வழக்கு?
» கற்பழிப்பு குற்றங்களுக்கு சினிமா மீது பழிபோடுவதா?- நடிகை குஷ்பு ஆவேசம்
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum