தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை

Go down

சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை Empty சென்னை கோவில்களில் ஆடி கிருத்திகை

Post  birundha Fri Mar 29, 2013 4:38 pm

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான முருகன் கோவில்கள் உள்ளன. இத்தலங்களில் ஆடி கிருத்திகை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. லட்சக் கணக்கான பக்தர்கள் முருகனை கண்குளிர கண்டு, அவனிடம் மனதை பறிகொடுத்து, உள்ளம் உருக வழிபாடுகள் செய்ய தயாராகி வருகிறார்கள்.

பக்தர்கள் வசதிக்காக இத்தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முருகன் தலமும், ஒவ்வொரு வகையில் தனித்துவமும் பாரம்பரிய சிறப்பும் கொண்டது. அந்த தலங்களில் செய்யப்பட்டுள்ள ஆடி கிருத்திகை விழா ஏற்பாடுகள் பற்றிய விவரம் வருமாறு:-

வடபழனி..........

வடபழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு விடும். அதிகாலை 3.30 மணியில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். அப்போதே அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் ஆரம்பமாகும். அபிஷேகம் முடிந்த பிறகு முருகனுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரத்தில் வடபழனி முருகனை காண கண் கோடி வேண்டும்.

தீப அலங்காரத்தில் ஜொலிக்கும் முருகனிடம் நாம் மனம் உருக வேண்டினால் நம் வாழ்க்கையும் ஜொலிக்கும். இந்த காட்சியைக் காண காலை 7 மணி முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். பால்காவடி, புஷ்ப காவடி எடுத்து பக்தர்கள் வருவார்கள். அலகு குத்தி வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். காவடிகள் வரும் போது எழும் ``அரோகரா'' கோஷம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். மதியம் 12 மணி வரை முருகனை தங்க கவச அலங்காரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்.

அதன்பிறகு மதிமய் 1 மணி முதல் மாலை 4 மணி வரை முருகப்பெருமானுக்கு ராஜ உடை அலங்காரம் செய்யப்படும். பழனியில் ராஜ அலங்காரத்தை பார்க்கும் போது எத்தகைய சிலிர்ப்பு ஏற்படுமோ, அத்தகைய அனுபவத்தை இங்கும் பக்தர்கள் பெற முடியும். மாலை 5 மணி முதல் முருகப் பெருமானை சந்தன காப்பு, புஷ்ப அலங்காரத்தில் தரிசனம் செய்யலாம்.

மலர்கள் நிறைந்த நிலையில் மூலவரை பார்ப்பது இன்பமாகும். ஆடி கிருத்திகை தினத்தன்று பக்தர்கள் மொட்டை போடவும், அர்ச்சனை செய்யவும், சிறப்புக் கட்டண தரிசனத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு ஆலயத்தை 044-24836903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருப்போரூர்.............

சென்னை புறநகரில் உள்ள முருகன் ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது திருப்போரூர் ஆலயம். ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தற்போது திருப்போரூர் ஆலயத்தில் பாலாலயப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே அபிஷேக ஆராதனைகள் நடக்குமா என்று உறுதியாக தெரிவிக்கப்பட வில்லை.

மூலவர், ஸ்ரீசக்கரம் தவிர மற்ற சன்னதிகளில் பணிகள் நடப்பதால் கிருத்திகை கொண்டாட்டம் இந்த தடவை ஓரளவு தான் இருக்கும். சுவாமி வீதிஉலாவும் கிடையாது. எனவே திருப்போரூர் முருகன் ஆலயத்துக்கு வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ள பக்தர்கள் 044-27446226 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பூஜை நேர விவரங்களை உறுதி செய்து கொள்வது நல்லது.

ஆண்டார் குப்பம்......

சிறுவாபுரி போல ஆண்டார் குப்பம் முருகன் கோவிலும் பழமை சிறப்புக் கொண்டது. பொன்னேரி தச்சூர் கூட் ரோட்டில் இருந்து கிராமத்துக்குள் அமைந்துள்ள இத்தலத்தில் முருகப் பெருமான் தொடையில் கை வைத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு இத்தலத்தில் நடை திறக்கப்படும்.

அன்று முருகப் பெருமானுக்கு 3 கால பூஜைகள் நடைபெறும். காலை அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு காவடிகள் வருகை அதிகமாக இருக்கும். ஆண்டார் குப்பம் சுற்றுப் பகுதி மக்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வருவார்கள். பிற்பகல் 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்., அமைதியான சூழலில் இங்கு முருகனை வழிபட்டு வரலாம். பூஜை தொடர்பான விவரங்களை 044-27974193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குமரகோட்டம்........

காஞ்சீபுரத்தில் உள்ள குமரகோட்டம் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் ஒன்று. முருகனின் அருளாற்றலுடன் பின்னி பிணைந்த தலம் இது. இங்கு ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்,. காலை 7.30 மணிக்கு காலசந்தி அபிஷேகம் நடைபெறும்.

காலை 8 மணிக்கு மீண்டும் கிருத்திகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 11 மணிக்கு ஒரு அபிஷேகம் நடைபெறும். குமர கோட்டத்தில் உள்ள முருகனுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளை காண பக்தர்கள் அதிக அளவில் திரண்டு விடுவார்கள் என்பதால் அன்று மதியம் நடை சிறிது நேரமே மூடப்பட்டு இருக்கும். 30 நிமிட இடைவேளைக்கு பிறகு உடனே மீண்டும் வழிபாடு தொடங்கி விடும்.

மாலை 5 மணிக்கு அபிஷேகம் செய்யப்படும். மாலை 6.30 மணிக்கு குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ராஜ வீதியை சுற்றி வருவார். குமர கோட்டத்தில் நடக்கும் ஆடி கிருத்திகை விழா தொடர்பான நிகழ்ச்சிகளை பக்தர்கள் 044-27222049 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

கந்தகோட்டம்......

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டத்தில் ஆடி கிருத்தகை விழாவை மிக கோலாகலமாக நடத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். காலை 7 மணிக்கு மூலவருக்கு பால், பஞ்சாமிர்த, பன்னீர் அபிஷேகம் நடத்தப்படும்.

அதைத் தொடர்ந்து முத்துகுமாரசுவாமிக்கு தீப, தூப ஆராதனைகள் நடைபெறும். அப்போது சிறப்பு அலங்காரத்தில் முத்து குமாரசாமியை வணங்கினால் வேண்டும் வரம் எல்லாம் பெறலாம். ஆடி கிருத்திகையன்று முத்துக்குமாரசாமியை மனதில் வேண்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள்.

அலகு குத்தியும் பக்தர்கள் வருவார்கள். முருகா, முத்துக்குமரா என்ற கோஷம் எங்கும் ஒலிக்கும். பகல் 11.30 மணிக்கு மீண்டும் ஒரு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். அன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடத்தப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் முத்துக்குமாரசாமி வீதி உலா வருவார். பெரிய மாட வீதியில் நின்று அவரை கண்குளிர கண்டு களிக்கலாம்.

வெள்ளி ரத வீதி உலாவின் போது முத்து குமாரசாமிக்கு நவரத்தினங்கள் பதித்த தங்க கவசம் சாத்தப்பட்டு இருக்கும். அதை கண்டு தரிசனம் செய்ய தவறாதீர்கள். கிருத்திகை விழாவுக்காகக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து 044-25352192 மற்றும் 25352293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

குன்றத்தூர்........

ஆடி கிருத்திகை தினத்தன்று குன்றத்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும். பிறகு முருகப் பெருமானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரம் செய்யப்படும். இதையடுத்து முருகனுக்கு சோடக தீபாராதனை நடத்தப்படும்.

அன்று முழுக்க நடை திறந்தே இருக்கும். அபிஷேக ஆராதனைகளும் இடையிடையே நடைபெறும். இத்தலத்துக்கு மற்ற தலங்களில் வருவது போல நிறைய காவடி வராது. என்றாலும் கிருத்திகையன்று முருகனை வழிபட பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு விடுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு அன்று மதியம் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றிரவு 10 மணிக்கு மலை அடிவாரத்தில் முருகர் வீதிஉலா வருவார். மாட வீதியில் அவரது புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் வசதிக்காக குன்றத்தூர் கோவிலில் குடிநீர், தரிசன வசதி, சிறப்பு தரிசன வசதி உள்பட எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை 044-24780436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறுவாபுரி.......

சென்னை-நெல்லூர் நெடுஞ்சாலை பகுதியில் சிறுவாபுரி உள்ளது. இந்த தலத்தில் சென்று வழிபாடு செய்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகமாகும். இதன் காரணமாக சிறுவாபுரி முருகன் கோவில் சென்னை நகர பக்தர்களிடம் சமீப காலமாக அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆடி கிருத்திகை தினத்தன்று இத்தலத்துக்கு பக்தர்கள் பல்லாயிரக் கணக்கில் பாதயாத்திரையாக வருவார்கள். திருமுல்லைவாயலில் இருந்து சிறுவாபுரிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தார் பாதயாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு அவர்களது பாதயாத்திரையில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆடி கிருத்திகையன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8.30 மணி வரை நடை மூடப்படாமல் திறந்தே இருக்கும். அதிகாலை 5 மணிக்கு முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு காலை 9 மணி முதல் 10 மணி வரை பாலாபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும்.

அதை பார்த்தால் குடும்பத்தில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி, புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum