தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்து வாலு

Go down

அடுத்து வாலு                                       Empty அடுத்து வாலு

Post  ishwarya Thu Mar 28, 2013 5:22 pm

வேட்டை மன்னன், வாலு என இரு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சிம்பு. இதில் வேட்டை மன்னன் முதலில் தொடங்கப்பட்டது. ரொம்ப நாட்கள் கழித்து தொடங்கியது வாலு. ஆனால் சீனியா‌ரிட்டி வ‌ரிசையில் படத்தை வெளியிடும் எண்ணம் சிம்புக்கு இல்லை. இது என்ன வேலை வாய்ப்பு அலுவலகமா?

வாலு சிம்புக்கு திடீரென்று உதித்த எண்ணம். சரசரவென சின்னதாக ட்ரெய்லர் தயார் செய்து சந்தானத்தையும் ஹன்சிகாவையும் கூட்டணி சேர்த்து அந்த பம்பளிமாஸ் வாயால், சில பசங்களை பார்க்க பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதி‌ரி பசங்களை பார்த்த உடனே பிடிச்சிடும் என்று தனுஷுக்கு ராக்கெட் விட வைத்து… ம்… ரொம்ப தூரம் வாலில் பயணித்துவிட்டார். ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் பிளஸ் காமெடி கதை.

ஜுனியரான வாலு படத்தில் சிம்பு கவனம் செலுத்தியதால் வேட்டை மன்னன் தயா‌ரிப்பாளர் நியாயமாக கோபித்திருக்க வேண்டும். ஆனால் சின்ன முணுமுணுப்புகூட இல்லை. அதிசயம் எல்லாம் இல்லை. வேட்டை மன்னனை தயா‌ரிக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் வாலு படத்தின் தயா‌ரிப்பாளரும்.

விரைவில் தமன் இசையில் உருவான யாருடா மோருடா தாவுடா தீந்துடா… ஸ்டைலில் தானே எழுதிய பாடலை வெளியிட இருக்கிறார் சிம்பு.

இந்தப் படமேனும் தனுஷின் போட்டியாளராக சிம்புவை உயர்‌த்த வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum