மனிஷாவுக்கு நோ சொன்ன சவுண்ட் என்ஜினியர்
Page 1 of 1
மனிஷாவுக்கு நோ சொன்ன சவுண்ட் என்ஜினியர்
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமானவர் மனிஷா. தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மனிஷா பெங்களூர் வரவு என்பதால் ஓரளவுக்கு தமிழ் நன்றாக பேசுவார். இதனால் அவரையே இப்படத்தில் டப்பிங் பேச வைக்க இயக்குனர் சுசீந்திரன் விரும்பியுள்ளார். இதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு, டப்பிங் பேச ஸ்டூடியோவிற்கு சென்றார் மனிஷா. இரண்டு நாட்கள் டப்பிங் பேசிய பிறகு உங்கள் குரல் சரியில்லை எனறு சவுண்ட் என்ஜினியர் மனிஷாவை திருப்பி அனுப்பி விட்டாராம். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார் மனிஷா. தற்போது இவருக்கு பதிலாக வேறொருவர் டப்பிங் பேசி வருகிறார். இதுகுறித்து மனிஷா தரப்பில் கூறும்போது, சினிமாவில் ஜெயிக்கணும்னா சவுண்ட் என்ஜினியரும் மனசு வைக்கணும் என்கிறார்கள். ஏற்கெனவே ராசுமதுரவன் இயக்கும் ‘சொகுசு பேருந்தில்’ நடிக்கும்போதும் மனிஷாவுக்கு இதேபோன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இயக்குனர் இந்த பிரச்சினையை கொண்டுவந்தார். ஆனால், இங்கோ சவுண்ட் என்ஜினியர் பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிஷாவுக்கு சபாஷ் சொன்ன ராம்கோபால் வர்மா!
» அசின் சொன்ன நோ
» கட்டிப்பிடிச்சா… சவுண்ட் கொடுக்கும் அமலாபால் : அதர்வா!
» தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்!
» லிங்குசாமிக்கு நோ சொன்ன அசின்
» அசின் சொன்ன நோ
» கட்டிப்பிடிச்சா… சவுண்ட் கொடுக்கும் அமலாபால் : அதர்வா!
» தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்!
» லிங்குசாமிக்கு நோ சொன்ன அசின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum