தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுதர்சன தியானம்

Go down

சுதர்சன தியானம் Empty சுதர்சன தியானம்

Post  meenu Thu Mar 28, 2013 5:05 pm

ஒளி வீசக்கூடிய உடல் அமைப்புக் கொண்டவரும்
மின்னல் போன்ற கண்களைப் பறிக்கும் ஆடைகளை
அணிந்த வரும் விசாலமான கண்களைப் பெற்ற
வரும் என்றென்றும் இளமையுடன் திகழ்பவரும் மிகவும்
அழகானவரும் பாஞ்ச ஜன்யம், கௌமோதகி,
சாரங்கம் என்ற ஆயுதங்களை நட்பாகக்
கொண்டவரும் ஆதிசேஷனுக்குப் பிரியமா னவரும்
சங்கு, சக்கரம், வாள், பாசம், அங்குசம் ஆகியவற்றை
ஏந்தியவரும் தன்னை எரித்தவர்களை வதம் செய்பவரும்
திருட்டுப் பயத்தையும், அரசாங்கத்தாரால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும், எதிரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் போக்குபவரும் ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயர் கொண்டவரும்
கோபம் அடைந்தவரும் பிரளய காலாக்னி போன்று
ஜொலிக்கக்கூடிய பேரொளி பெற்றவரும் அழகிய பட்டுப்
பீதாம்பரங்களைத் தரித்தவரும் திருமண்ணால் நிரப்பப்பட்டு
உடல் அமைப்பினைக் கொண்டவரும் நினைத்தவுடன்
நினைத்த இடத்துக்குச் சஞ்சாரம் செய்யக் கூடிய ஆற்றல்
பெற்றவரும் அழகான திருக்கைகள் ஆறினைப் பெற்றவரும்
தீட்சண்யமான தன் பார்வையின் ஒளியினால்
முதலையாகி வந்த கந்தர்வனை சம்ஹரித்தவரும்
மகா வீரரும் மந்திர கோஷங்களில் நிறைந் திருப்பவரும்
ஸ்ரீ ராமாவதாரக் காலத்தில் பரதனாகத் திரு அவதாரம்
செய்தவரும் ராவணன் போன்றவருக்குப் பீதியை அளித்த
வரும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்ற பெயருடன் பகவான் ஸ்ரீ ஹரிவிஷ்ணுவின் தாசனாக மாறி நிற்ப வருமான ஸ்ரீ சுதர்சனரே,
உம்மைத் தியானிக்கிறேன். என்னுடைய சத்ருக்
கூட்டங்களைக் கொல்ல வேண்டும்.
பூதப் பிரேதப் பிசாசுகளைச் சீக்கிரமாக நாசம் செய்ய வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum