தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் பி‌ரிமியர் ஷோ

Go down

லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் பி‌ரிமியர் ஷோ Empty லாஸ் ஏஞ்சல்ஸில் விஸ்வரூபம் பி‌ரிமியர் ஷோ

Post  ishwarya Thu Mar 28, 2013 2:31 pm

இந்த மாதம் பத்தாம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடப்பதாக இருந்த விஸ்வரூபம் பி‌ரிமியர் ஷோ பட வெளியீடு தள்ளிப் போன காரணத்தால் வரும் 24 ஆம் தேதி நடக்கிறது.

கமலின் சிந்தனை இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டை நோக்கியே இருக்கிறது. ஹாலிவுட்டில் விரைவில் நுழைய இருக்கும் தனக்கு ஒரு அறிமுகமாகதான் விஸ்வரூபத்தை அவர் பார்க்கிறார். மேலும் விஸ்வரூபத்தில் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பங்களை படத்தில் பணிபு‌ரிந்தவர்கள் முழுமையாக அனுபவப்பட வேண்டும் என்பது கமலின் விருப்பம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நக‌ரில் விஸ்வரூபம் பி‌ரிமியர் ஷோவுக்கு கமல் ஏற்பாடு செய்ததற்கு இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. படத்தில் பணிபு‌ரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் பிரதான காதாபாத்திரங்களில் நடித்தவர்களும் இந்த பி‌ரிமியர் ஷோவில் கலந்து கொள்கிறார்கள். ஹாலிவுட் பிரபலங்களும் இதில் அடக்கம்.

அமெரிக்காவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் படத்துக்கு திரையரங்குகள் ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum