ஊப்ளியில் இருந்து வந்த பெங்களூர் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடுவழியில் நிறுத்தி 2 மணிநேரம் சோதனை
Page 1 of 1
ஊப்ளியில் இருந்து வந்த பெங்களூர் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடுவழியில் நிறுத்தி 2 மணிநேரம் சோதனை
ஊப்ளியில் இருந்து கதக் மாவட்டம் வழியாக ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் அந்த ரெயில் ஊப்ளியில் இருந்து வழக்கம் போல பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த நிலையில், ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயிலின் குளிர்சாதன பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாகவும், சில நிமிடங்களில் அது வெடித்து சிதறும் என்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுபற்றி உடனடியாக ஐதராபாத் போலீசார், பெங்களூர் நகர போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து, ஊப்ளியில் இருந்து பெங்களூர் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் இரவு 7 மணியளவில் கதக் மாவட்ட ரெயில் நிலையத்திற்கு ஹம்பி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. உடனே அந்த ரெயில் நிலையத்திலேயே ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் குளிர்சாதன ரெயில் பெட்டி மட்டும் இல்லாமல் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர். அதன்பிறகு, ஒவ்வொரு பெட்டிகளிலும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரெயில்வே போலீசார் சோதனை செய்தார்கள்.
அதுபோல பயணிகள் உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் ரெயிலில் வெடிகுண்டோ? வெடிமருந்துகளோ எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்த பயணிகள் மற்ற ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தார்கள்.
ஐதராபாத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்ததால் அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் வேண்டும் என்றே ஐதராபாத் போலீசாரை திசை திருப்பும் நோக்கத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை பிடிக்க ஐதராபாத் மற்றும் கர்நாடக ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெடிகுண்டு சோதனைக்கு பிறகு, கதக்கில் இருந்து 2 மணி நேரம் தாமதாக ஹம்பி எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தினால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீலகிரிக்கு மலை ரெயிலுக்கு 3-வது புதிய என்ஜின் சோதனை ஓட்டம்
» சன் டிவி-யால் ஒஸ்திக்கு வந்த சோதனை
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது. போர் மூளும் பதற்றம் கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
» சன் டிவி-யால் ஒஸ்திக்கு வந்த சோதனை
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது. போர் மூளும் பதற்றம் கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum