ராஜபக்சேயை கண்டித்து நாகரில் மாணவர்கள் திடீர் மறியல்
Page 1 of 1

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவித்து தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலும் ராஜபக்சேயை கண்டித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். உண்ணாவிரதம், ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு என்று போராட்டம் தீவிரம் அடைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே அனைத்து என்ஜினீயரிங் மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். 4 நாட்கள் நடந்த இந்த போராட்டம் பிறகு கைவிடப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நாகர்கோவிலில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பிறகு மாணவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாணவர்களை மறியலை கைவிடும்படி கூறினார்கள். ஆனால் மாணவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்து ராஜபக்சேயை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து சுமார் 25 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை விடுவித்தனர்.
மாணவர்கள் போராட்டம் மீண்டும் சூடு பிடித்துள்ளதை தொடர்ந்து இலங்கை தமிழர் பிரச்சினையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ராஜபக்சேயை கண்டித்து நாகரில் மாணவர்கள் திடீர் மறியல்
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» புதுவையில் மறியல் போலீஸ் தடியடி
» புதுவையில் மறியல் போலீஸ் தடியடி
» சேலத்தில் ரயில் மறியல்: 50 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum