வ.உ.சி. உயிரியல் பூங்காவில் 27 முட்டையிட்ட முதலை
Page 1 of 1

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் முக்கியமாக திகழ்வது வ.உ.சி. உயிரியல் பூங்கா. இந்த பூங்காவை பார்வையிட தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தினர் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் இங்குள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் பாம்புகள் ஆகிய வற்றை கண்டு ரசித்து செல் கின்றனர். பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் கடந்த 1 வருடங்களாக விலங்கினங்கள், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பூங்காவில் தற்போது 11 முதலைகள் உள்ளன. அதில் 5 முதலைகள் 50-ல் இருந்து 60 வயதுள்ளவையாகும். இதில் 3 பெண் முதலைகளும் 2 ஆண் முதலைகளும் அடங்கும். மீதமுள்ளவற்றில் 2 ஆண், 4 பெண் முதலைகள் அடங்கும். இவை சுமார் 2 வயதுடையவையாகும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை முட்டையிட்டது. அதன் மூலம்தான் தற்போது 6 குட்டி முதலைகள் பூங்காவுக்கு புதிய வரவாக உள்ளன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 60 வயது மதிக்கத்தக்க சதுப்பு நில முதலை 27 முட்டையிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல முதலைகள் பூங்காவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது முதலை இட்டுள்ள 27 முட்டைகளை மண் தொட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதற்கு சில காரணங்கள் உள்ளன. வெப்பநிலையை பொறுத்துதான் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் வெளிவருவது அமைகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு முட்டையை அடைகாக்க சராசரியாக 55 முதல் 110 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
ஆண், பெண் குட்டியாக அடைகாக்கவும் வெப்ப நிலைதான் காரணமாக அமைகிறது. 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைத்திருந்தால் அந்த முட்டைகள் பெண் முதலையாக உருவாகவும் 34 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலையில் முதலை முட்டைகளை அடைகாத்தால் அவை ஆண் முதலைகளாக உருவாகவும் வாய்ப்புள்ளது.
35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு அதிகமான நிலையில் முட்டை அடைகாக்கப்பட்டால் அந்த முட்டைக்குள் இருக்கும் கரு சிதைந்து விடும் என்கிறார்கள். எனவே அதனை அடிப்படையாக கொண்டு தற்போது முதலை இட்டுள்ள 27 முட்டைகளையும் அடை காத்து குஞ்சுகளாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இது பற்றி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் அசோகன் கூறும்போது, தற்போது முதலை இட்டிருக்கும் முட்டைகளில் பெரும்பாலானவற்றை பெண் முதலைகளாக்க நினைத்துள்ளோம். அப்போதுதான் பூங்காவில் முதலை இனப்பெருக்கத்தை அதிகரிக்க முடியும். 2 வருடத்துக்கு முன்பு ஒரு முதலை 20 முட்டையிட்டது. ஆனால் அவற்றில் 9 முட்டைகள் மட்டுமே குஞ்சுகளானது. எனவே இந்த முறை அது போன்று நடக்காதவாறு இருக்க நினைத்துள்ளோம் என்று கூறினார். ஆக இன்னும் 80 முதல் 100 நாட்களில் பூங்காவுக்கு புதிய வரவாக எத்தனை முதலைகுட்டிகள் வந்து மக்களை மகிழ்விக்க உள்ளது என்பது தெரிந்துவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூவரை விழுங்கிய முதலை
» தமிழ்ப் பூங்காவில் வண்ணமலர்கள்
» மே தின நினைவு பூங்காவில் மு.க.ஸ்டாலின் மரியாதை
» ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum