கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
Page 1 of 1
கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (27-ந் தேதி) தொடங்கியது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
கோவை கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 406 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 28 மாணவர்களும், 19 ஆயிரத்து 214 மாணவிகளும், 853 தனித்தேர்வர்களும் என மொத்தம் 39 ஆயிரத்து 95 பேர் எழுதினர்.
இதற்காக 108 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 11 மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு இன்று எடுத்துச்செல்லப்பட்டது.
தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை கண்காணிக்க 150 ஆசிரியர்கள் கொண்ட 25 பறக்கும் படை அமைக்கப்பட்டிருக்கிறது. பறக்கும் படையினர் ஒவ்வொரு தேர்வு மையங்களாக சென்று சோதனை நடத்தினர்.
கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கிக்கானி பள்ளிக்கு சென்று தேர்வை ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளிடம் தேர்வுக்காக செய்யப்பட்டிருந்த வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பயம் இல்லாமல் சிறப்பாக தேர்வு எழுதும்படி வாழ்த்துக் கூறினார்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி
» குறும்புக்கார மாணவிகள்
» நண்பனிடம் பயிற்சி பெற்று பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்தேன்: மாணவ பருவம் பற்றி கார்த்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum