தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்

Go down

கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள் Empty கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்

Post  meenu Thu Mar 28, 2013 1:38 pm


பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு, பகலென கண்விழித்து படித்த மாணவர்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 12ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ஏப்ரல், மே மாதம் கோடை விடுமுறையாகி விடும். கோடையில் புத்துணர்ச்சி பெறுவதற்கு விடுமுறையை குதூகலமாக கொண்டாடுவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை ஆரப்பாளையம், திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, தேனியில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமான இயங்கும் பஸ்களுடன், கூடுதலாக 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல் கொடைக்கானலில் இருந்தும் அந்த பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சிறப்பு அம்சமாக கொடைக்கானலில் சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் பஸ் நிலையத்திற்கே அந்த சுற்றுலா பஸ்கள் வந்துவிடும்.

இந்த சுற்றுலா பஸ்களை தினமும் 20 முறை இயக்கப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவதற்காகவும், திண்டுக்கல் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை, திருச்சி, சேலம், சென்னை போன்ற ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

கோடை விடுமுறைக்காக மட்டும் மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களில் செல்வதற்கு வசதியாக மக்கள் முன்பதிவும் செய்து கொள்ளலாம். திண்டுக்கல், பழனி, மதுரை (ஆரப்பாளையம்) வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து வழிகாட்டிகள், அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum