‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு
Page 1 of 1

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வாதராடிய வழக்கறிஞர், முதலில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் படம் தடை செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.
பின்னர், அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. “விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை. தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன” என்று சென்சார் போர்டு மீது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு எந்த பிரச்சினையும் இன்றி ஓடுகிறது என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ளன என்றும் கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதாடினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்தபோது, அரசுத் தரப்பு வாதம் வேறொரு பாதையில் சென்றது. கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 4 தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர் 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உலகம் முழுவதும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் வளாகத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரவு 10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், ‘தமிழகத்தில் விஸ்வரூபம்’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. நாளை முதல் படத்தை வெளியிடலாம். வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பின்னர் நடைபெறும். மாவட்ட ஆட்சியர்கள் விதித்த 144 தடை உத்தரவு நீக்கப்படுகிறது.‘ என்று குறிப்பிட்டார். இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
முன்னதாக, மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அரசின் கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு
» விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்
» விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்தது: சென்னை ஐகோர்ட் அறிவிப்பு
» விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum