தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துளசி-300 துளசி-300

Go down

துளசி-300 துளசி-300  Empty துளசி-300 துளசி-300

Post  meenu Thu Mar 28, 2013 12:38 pm

திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் துளசி தொடர் 300-வது எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. துளசியை பிரசன்னா கடத்தி வைத்திருக்கிறான். அதற்கு காரணம் துளசி மீது அவன் வைத்திருக்கும் காதல். அவள் மேல் கொண்ட அதீத அன்பால் பிரசன்னா சைக்கோவாக மாறுகிறான். துளசி எங்கும் தப்பித்து போய் விடாமலிருக்க அவளின் காலை உடைத்து அறையில் அடைத்து வைக்கிறான். துளசி அடைபட்டுக் கிடக்கும் உண்மையறிந்து செல்வா அன்று இரவே அவளைக் காப்பாற்றச் செல்கிறான். துளசியை காப்பாற்றும் வேளையில் செல்வாவை பிரசன்னா துப்பாக்கியால் சுடுகிறான். காலில் சுடப்பட்ட செல்வா மயங்கி விழுகிறான். பிரசன்னாவே அவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறான். அவனிடம் இனி என் விஷயத்தில் தலையிட்டால் உனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி உன் வாழ்வில் நிம்மதி இல்லாமல் செய்து விடுவேன். அதோடு உன் மனைவி தாமரையும் விதவை ஆகி விடுவாள் என்று மிரட்டுகிறான்.

பிரசன்னாவின் சுயரூபம் தெரிந்து கொண்ட செல்வா, துளசியின் பெற்றோரிடம் விஷயம் சொல்ல, பதறித் துடித்த அவர்கள் துளசியைப் பார்க்க, பிரசன்னா வீட்டிற்குச் செல்கின்றனர். செல்வா கூறிய விபரங்கள் அனைத்தும் உண்மைதான் என்று உணர்ந்து கொண்டவர்கள் துளசியை பிரசன்னாவிடமிருந்து காப்பாற்ற போலீசில் புகார் செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் பிரசன்னா குற்றவாளி என்பது தெளிவாகிறது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பிரசன்னா கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பிரசன்னாவிற்கு தண்டனை கிடைத்ததா?.. துளசி வாழ்வில் நிம்மதியடைந்தாளா...? அவளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்னவாயிற்று? அதிரடி திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர். திரைக்கதை: ராஜ்பிரபு, வசனம்: பாபா கென்னடி, இயக்கம்: பாலாஜி யாதவ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். து
» துளசி டீ துளசி டீ
» துளசி டீ
» துளசி டீ
» துளசி 10 துளசி 10

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum