புலிகளின் மர்ம உலகம்
Page 1 of 1
புலிகளின் மர்ம உலகம்
இந்தியாவின் தேசிய விலங்கை கொண்டாடும் விதமாகவும் உலகெங்கும் உள்ள புலிகளை பற்றிய உண்மைக் கதைகளை பகிர்ந்து கொள்ளும் பொருட்டும் வேர் டைகர்ஸ் ரூல் என்ற ஒரு மாத கால சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது, அனிமல் பிளானட் சேனல். ஏப்ரல் மாதம் முழுவதும் தினமும் இரவு 9 மணிக்கு இந்த தொடரை காணலாம். புலிகளின் ரகசிய நடத்தை, வேட்டையாடும் திறன், அவற்றின் சாகசங்கள் பற்றிய கதைகள் ஆகியவற்றை அனிமல் பிளானட் சேனல் குழுவினர் படம் பிடித்திருக்கிறார்கள். இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும், விலங்கு சரணாலயங்களிலும் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகளின் மர்ம உலகை வெளிப்பார்வைக்கு கொண்டு வருகிறது. புலிகள் பற்றி தங்களுக்கிருக்கும் ஆர்வத்தின் காரணமாக இந்தத் தொடருக்காக அனிமல் பிளானட் சேனலுடன் கைகோர்க்கிறார்கள் பிரபல இந்தி நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், பிபாஷா பாசு, மற்றம் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோர். அழியும் நிலையில் இருக்கும் புலிகள் இனத்தை காப்பாற்ற முயற்சிக்கும் இந்த நிகழ்ச்சியில் மனிதர்களை உண்ணும் புலிகள், தங்கள் குட்டிகளையே உண்ணும் புலிகள் என பல சுவாரசிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் புரோக்கன் டைல் என்ற புலி, சரணாலயத்தில்இருந்து தப்பியோடி சுமார் ஒரு வருட காலம் ராஜஸ்தான் கிராமப்புறங்களில் நடமாடிய சம்பவம் இதயத்தில் பரபரப்பை பற்ற வைக்கும். ரிட்டர்ன் ஆப் த டைகர் என்ற பகுதியில் வரும் சம்பவங்கள் நெகிழ வைப்பவை. 7 ஆண்டுகளுக்கு முன் சரீஸ்கா சரணாலயத்தில் இருந்த அனைத்து புலிகளும் வேட்டைக் காரர்களால் கொன் றொழிக்கப்பட்ட சோக பின்னணி நிச்சயம் நெஞ்சில் கனம் சேர்க் கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வடிவேலுவின் மதுரை வீட்டுக்குள் நுழைய முயன்ற 4 மர்ம நபர்கள்!
» மர்ம மாளிகையில் பலே பாலு
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்
» காதலன் மர்ம மரணம்! அல்போன்சாவிடம் விசாரணை துவக்கம்!!
» மர்ம மாளிகையில் பலே பாலு
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்
» காதலன் மர்ம மரணம்! அல்போன்சாவிடம் விசாரணை துவக்கம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum