மலையப்பட்டி பெருமாள் கோவில்
Page 1 of 1
மலையப்பட்டி பெருமாள் கோவில்
ஸ்தல வரலாறு...
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள கமலவள்ளி நாச்சியார் சமேத அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில். இது ஒரு மலைக்கோவில் ஆகும். திருமால் அடிப்பட்டியில் (மலைக்கோவில்) அமைந்துள்ள இந்த கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இத்திருத்தல ஈசனின் திருநாமம் திருவாகீசர்.
பரவெளி தத்துவத்தை வெளிப்படுத்தும் பெருமாளாக இறைவன் இத்திருத்தலத்தில் எழுந்திருளி இருப்பதால் திருவாகீசர் எனவும், கண் திருஷ்டிகளால் துன்புற்று வாடும் பக்தர்கள் இறைவனை பிரார்த்திக்கும் போது அவர்கள் மேல் விழுந்த கண் திருஷ்டிகளை இத்திருத்தல ஈசன் ஏற்று அடியார்களை கண் திருஷ்டியிலிருந்தும், கண் நோய்களில் இருந்தும் காப்பதால் கண் ஆயிரம் உடையார் என்றும் போற்றப்படுகின்றார்.
இத்திருத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் புன்றிகாஷனாகவும், சயன நிலையில் அனந்த பத்மநாப சுவாமியாகவும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டநாதனாகவும், ஒரே மண்டபத்தில் சேவை செய்கின்றார். இந்த ஆலயத்தில் உள்ள விநாயக பெருமான் கந்த வாரணர் என்று போற்றப்படுகிறார்.
இந்த விநாயகர் முருக பெருமானின் அவதார தோற்றத்துக்கு முந்தைய மூர்த்தி. தம்மை வழிபடுவோருக்கு கணபதி சக்திகளோடு, முருகரின் சக்தியையும் சேர்த்து வழங்கும் வல்லமை வாய்ந்தவர். இந்த கோவிலுக்கு எதிரில் மிக அபூர்வமான சக்தி தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த சக்தி தீர்த்ததில் விளைந்துள்ள தர்ப்பை புற்கள் நேரடியாக பராசக்தி லோகத்தில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
இந்த தலத்தில் வீற்றிருக்குத் பெருமாளுக்கு அவரவர் கைகளால் முப்பது முழும் அளவிற்கு குறையாமல் சாமந்தி மஞ்சள் நிற மணம் உள்ள செவ்வந்தி போன்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதற்கடுத்து முதலில் பெருமாளின் திருப்பாதங்களுக்கு நேரே உள்ள பெருமாளின் தலைக்கு நேர் எதிரே உள்ள தூணை தரிசனம் செய்ய வேண்டும். அதற்கு பிறகே பெருமாளை முழுமையாக தரிசிக்க வேண்டும்.
இத்திருத்தல பெருமாளுக்கு முன்னே திகழும் இரண்டு தூண்களும் விசேஷமான சக்திகளை உடையவை. பொதுவாக இறை மூர்த்திகளை மறைக்கும் வண்ணம் தூண்களை ஆலயங்களில் அமைப்பதில்லை. அவ்வாறு இருக்கும் போது ஸ்ரீ ரெங்கநாதரின் சயன கோலத்தை முழுமையாக காண முடியாத வகையில் தூண்கள் அமைக்கப்பட்டு இருப்பதன் பின்னணியில் நிச்சயம் ஒரு ஆன்மிக காரணம் உள்ளது.
அதன் அர்த்தத்தை ஆத்ம விசாரம் செய்துதான் உணர முடியும். இத்தகைய தூண்களை ஹரி நேத்ர தூண்கள் என்று பெரியோர்கள் அழைக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு புதுக்கோட்டையில் இருந்தும், திருச்சியில் இருந்து துவாக்குடி, அசூர், செங்களூர் மார்க்கமாகவும் செல்லலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்தலசயனப் பெருமாள் கோவில்
» காளமேக பெருமாள் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum