குலசை முத்தாரம்மன் கோவில்
Page 1 of 1
குலசை முத்தாரம்மன் கோவில்
ஸ்தல வரலாறு...
தசரா நாயகியான சக்தி, குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனாக அருள் பாலிக்கிறாள். அம்பாள் தன் திருமேனியைத் தானே தேர்ந்தெடுத்தாள் என்பது இக்கோயில் வரலாற்றின் தனி சிறப்பு. அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார்.
இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும். எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, இயந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர்.
இதனால் முத்துநோய் இறங்குகிறது. முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன் எனப்பட்டாள். அதுவே பின்னர் முத்தாரம்மன் என மறுவியது. கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் சுவாமி அம்பாள் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து இருக்கிறார்கள்.
மதுரையை மீனாட்சியன்னை ஆட்சி செய்வதைப் போல இங்கும் அம்பாளின் ஆட்சியே நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரி விசயதசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம் நடக்கும். இதுவே இத்தலத்தின் மிகப் பெரிய விழா ஆகும். பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து, காணிக்கை பெற்று அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது சிறப்பு அம்சமாகும்.
இதனால் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் வெகு விமரிசையாக நடக்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் உடனே குணமாகிவிடுகிறது. பிள்ளை வரம் வேண்டுதலை அம்மன் உடனடியாகத் தீர்த்து வைக்கிறாளாம். 41 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தொழுநோய் குணமாகிறது.
கை,கால், ஊனம், மனநிலை பாதிப்படைந்தவர்கள், ஆகியோர் இத்தலத்தில் வழிப்பட்டு குணமடைகின்றனர். சொத்துகள் இழந்தவர்கள் இத்தலத்தில் வழிபட்டு அந்த கஷ்டத்திலிருந்து மீள்வதாகக் கூறுகிறார்கள்.
மாவிளக்கு பூசை, அங்கப்பிரதட்சணம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. கோயில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» குலசை முத்தாரம்மன் வழிபாடுகளும், பலன்களும்

» முத்தாரம்மன் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum