தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு...

Go down

மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு... Empty மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு...

Post  birundha Wed Mar 27, 2013 10:29 pm

மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்: மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் அடிக்கடியோ, அல்லது மகம் நட்சத்திரத்தன்றோ வழிபட வேண்டிய திருத்தலம் திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

இக்கோவில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ள விராலிப்பட்டி அருகே உள்ளது. சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், தேவகுருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயருரும் வந்திருந்தார். அப்போது தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும் விதமாக தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்தில் இருந்த உணவை அவரை உண்ணும்படி பணிந்தார்.

இந்நிகழ்விற்கு பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்புமிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஷ்வரர் வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.

மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த 5 முனிவர்களில் இவரும் ஒருவர். கோவில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாக சொல்கிறார்கள். இவர் ஒரு தவமேடையில் யோகத்தில் மனதை ஒருங்கிணைத்து சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசிமேடை என்ற பெயர் ஏற்பட்டது.

பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பவதால் மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூபமாக கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரத்வாஜரை குருவாக கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள்.

சிவனுக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மாணிக்கவல்லி, மரகதவல்லி என்ற 2 அம்பிகையர் காட்சி தருகின்றனர். மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள் அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களை தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியை காண்பது அரிது.

இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால்தான் அம்மன் சன்னதியில் அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum