பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஸ்தல வரலாறு...
Page 1 of 1

திருவண்ணாமைலையில் மலையின் கிழக்குப்புறத்திலும், அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்கிலும், ஆலயத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எழிலான குன்றே பவளக்குன்று ஆகும்.
இம்மலையின் உச்சிக்கு செல்ல 17ம் நுற்றாண்டில் செஞ்சி நாயக்கர்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பவளக்குன்றின் மீது எளிய வடிவிலான அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சந்நிதி, முகமண்டபம், விநாயகர் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி, நந்தி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது.
ஆலயக் கருவறையின் நடுவே பவளகிரீஸ்வரனாகிய லிங்கத்தின் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோலம் வலது பாகம் சிவனுக்குரிய ஆண்மைத் தோற்றத்தையும், இடது பாகம் பெண்மைக்குரிய தோற்றத்தையும் அதற்குரிய ஆடை ஆணிகலன்களோடு காணப்படுகிறது.
சிவனது மேல் வலது கை வழுவை ஏந்தியும், கீழ் வலது கை அபய முத்திரையிலும், இடது புறம் மேல் இடக்கை பாசத்தையும், கீழ் இடக்கை லோப முத்திரையிலும் காட்சி வருகின்றன. முத்தலாம்பினை மகாமண்டபத்தில் தென் திசையை நோக்கி முத்தலாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. அன்னை நான்கு கரடங்களுடன் மேல் இரு கரங்களில் பாசாங்குசம் ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரதம் காட்டியும் அருள் வழங்கும் கோலத்தில் காட்சி தருகின்றார்.
முத்தலாம்பிகை அன்னையின் சந்நிதிக்கு அருகே சிறிய குகை போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதில் சிறிது காலம் ரமண மகாரிஷி தவமிருந்ததாக இவ்வாலயத்தில் குறிப்பு காணப்படுகிறது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இச்சிறப்பு வாய்ந்த பவளப் குன்றையும் அதன் மீது எழுந்தருளியுள்ள அர்த்த நாரீஸ்வரரையும் வணங்கிப்பேறு பெறலாம். இயற்கையை ரசிக்க விரும்புவோர் இம்மலை மீது ஏறி திருவண்ணாமலையின் அழகையும் கண்டு மகிழலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு...
» கும்பேஸ்வரர் கோவில் ஸ்தல வரலாறு
» ராகு தலம் - திருநாகேஸ்வரம் ஸ்தல வரலாறு...
» ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum