யாரை எப்படி கும்பிட வேண்டும்?
Page 1 of 1
யாரை எப்படி கும்பிட வேண்டும்?
தெய்வத்தை வழிபடும் போதும், பொதுவாக மற்றவர்களை நாம் சந்திக்கும் போதும் நம்முடைய இரு கைகளையும் இணைத்து குவித்து நாம் கும்பிடுகிறோம். இதன் தத்துவம் வருமாறு:-
நமது உடல் ஐந்து கோசங்களால் ஆனது.
உணவினால் ஆனது - அன்ன மயக்கோசம்
மூச்சுக்காற்றினால் ஆனது - பிராண மயக்கோசம்
எண்ணங்களால் ஆனது - மனோ மயக்கோசம்
அறிவினால் ஆனது - விஞ்ஞான மயக்கோசம்
மகிழ்ச்சியினால் ஆனது - ஆனந்த மயக்கோசம்.
இந்த ஐந்து கோசங்களையும் காப்பாற்றுவது நம்முள் இருக்கும் ஆன்மா. நம்முடைய ஐந்து விரல்களும், இந்த ஐந்து கோசங்களையும், உள்ளங்கை ஆன்மாவையும் குறிக்கும். இதே அமைப்பு மற்றவர்களிடம் இருந்தாலும், `ஆன்மா ஒன்றே' என்கிற மனோபாவத்தில், இரு கைகளையும் இணைத்துக் கும்பிடுகிறோம்.
இறைவனைக் கும்பிடும் போது, இரு கைகளையும் இணைப்பது, பரமாத்மா-ஜீவாத்மா ஐக்கியத்தை தெரியப்படுத்துகிறது. கும்பிடுவதில் சில முறைகள் உள்ளன.
* தெய்வங்கள், மகான்கள், சித்தர்கள்- இவர்களை, தலைக்கு மேல் கரங்களை உயர்த்தி கும்பிட வேண்டும்.
* ஆசிரியரையும், குருவையும் கும்பிடும் போது, குவித்த கரங்களை, நெற்றிக்கு நேராக வைத்து, ஞானச்சுடர் ஏற்றியதற்கு அவர் களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவிக்க வேண்டும்.
* தாயை, வயிற்றின் முன் கரம் கூப்பி வணங்க வேண்டும்.
* தந்தை, அரசன்- இவர்களை நம் வாய்க்கு நேராக கைகளை இணைத்து கும்பிட வேண்டும்.
* மற்றவர்களை, நாம் நம் மார்பு முன்பு கரம் சேர்த்து கும்பிட வேண்டும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» யாரை எப்படி கும்பிட வேண்டும்?
» யாரை வழிபட வேண்டும்
» யாரை எப்படி வணங்க வேண்டும்
» பைரவரை எப்படி வழிபட வேண்டும்
» கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும்?
» யாரை வழிபட வேண்டும்
» யாரை எப்படி வணங்க வேண்டும்
» பைரவரை எப்படி வழிபட வேண்டும்
» கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum