தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தலை எப்படி வார வேண்டும்?

Go down

கூந்தலை எப்படி வார வேண்டும்?        Empty கூந்தலை எப்படி வார வேண்டும்?

Post  ishwarya Sat Feb 23, 2013 3:14 pm

கூந்தலை எப்படி வார வேண்டும்-? கூந்தலை கலைய விடக்கூடாது, கூந்தலை வாரிவிடும் போது உயரத்துக்கேற்றபடி வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமாக இருக்கும். ஆனாலும் இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாகப் பின்னிவிட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்துவிடும்.கூந்தலின் நிறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்! கூந்தல் கருமை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அழகை இழந்து விடும். பழுப்பு நிறமாகி விட்ட கூந்தலின் அடியில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்பட்டன என்று பொருள்! குள்ளமாக இருக்கும் பெண்கள் சற்று எடுப்பாக இருக்க தலையை வாராமல் கலைத்து விட்டுக்கொண்டு உயரமாக காட்சி அளிக்கிறார்கள். தலை படியாமல் இருக்க இவர்கள் எண்ணெய் தடுவுவதே இல்லை.அடிக்கடி ஷாம்பூவைப் போட்டு தலையைச் சுத்தம் செய்து கூந்தலை படியவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. குள்ளமாக பெண்கள் இலேசாக தலை வாரி உச்சியில் சற்று தூக்கினாற்போல் கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பாக இருப்பார்கள். கூந்தல் பராமரிப்பு 1. வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து கூந்தலை ஷாம்பூ போட்டு அலசவும். 2. ஹேர் டிரையரை கூந்தலின் வேர்கால்களில் படும்படி உபயோகிக்க கூடாது. வரண்ட கூந்தலுக்கு ஹேர் டிரையரை பயன்படுத்தவே கூடாது. 3. தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல், ஹேர்பேண்ட் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 4. முடி குறைவாக இருந்தால் 1 டீஸ்பூன் விட்டமின் இ எண்ணெயை முதல் நாள் இரவில் தலைமுடியில் தடவி அடுத்த நாள் அலசுங்கள். 5. எலுமிச்சம் சாற்றை ,முட்டையை,அகத்திக்கீரையை அல்லது பொன்னாங்கண்ணி கீரையை (அரைத்து) தலைக்கு தேய்த்து குளிக்கலாம். 6. வெந்தயப்பொடியை எண்ணெயில் சிறிதளவு விட்டு குழைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளிக்கலாம்.


7. தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள், அன்னாச்சிப்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். முடி வளர புரோட்டீன்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவது அவசியம். குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் 1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல. 2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது. 3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது. 4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும். 5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும். 6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும். 7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும். 8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum