திரிசூலநாத சுவாமி கோயில்
Page 1 of 1
திரிசூலநாத சுவாமி கோயில்
ஸ்தல வரலாறு....
திருசூலம் அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில் புராதன புனித திருத்தலமாகும். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இத்தலம், முன்பு வானவான் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் அவன் பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்றும் வழங்கப்பட்டு வந்தது. பின்பு இறைவன் பெயராகிய திரிசூல நாதர் பெயர் கொண்டே திரிசூலம் என்ற பெயர் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று.அம்மனின் உள்ளங்கை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள்.
இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம் பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சுவாமி நாத சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» வைரவன் சுவாமி கோயில்
» வைரவன் சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» வைரவன் சுவாமி கோயில்
» வைரவன் சுவாமி கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum