பாதக்கரை சுவாமி கோயில்
Page 1 of 1
பாதக்கரை சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அமைதியும், அழகும் நிறைந்த கிராமம் நாலுமாவடி. திருவண்ணாமலை என்றவுடன் சிவபெருமானும், திருப்பதி என்றவுடன் வெங்கடாஜலபதியும், திருச்செந்தூர் என்றவுடன் முருகப் பெருமானும் நினைவுக்கு வருவது போல் நாலுமாவடி ஊர் பேரைக் கேட்டவுடன் நினைவுக்கு வருவது அவ்வூரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு பாதக்கரை சுவாமி தான்.
அந்த அளவிற்கு நாலுமாவடி மக்களின் உணர்விலும், உள்ளத்திலும் கலந்து காவல் தெய்வமாக விளங்கி கொண்டிருக்கிறார். நாலுமாவடி சுற்று வட்டாரங்களில் இக்கிராம மக்கள் மிகவும் கண்ணியமானவர்கள், நேர்மையானவர்கள் என்ற நல்ல பெயர் உண்டு. இதற்கு காரணமே இவர்கள் பாதக்கரை சுவாமியின் பக்தர்களாக இருப்பதால் தான்.
இவர் தன்னை வழிபடும் பக்தர்களை நல்ல ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் விளங்கச் செய்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை தை மாதம் பொங்கல் திருநாளும், ஜப்பசி மாதம் தீபாவளி திருநாளும் முக்கியமான பண்டிகைகள் ஆகும்.
ஆனால் இக்கிராம மக்களுக்கு புரட்டாசி மாதம் இக்கோவிலின் திருவிழாவே முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழாவின் போது இக்கிராம மக்கள் எந்த ஊரில் எந்த நிலையில் இருந்தாலும் ஊருக்கு வந்து பாதக்கரையானின் பாதம் பணிந்து அவருடைய அருளையும், ஆசீர்வாதத்தையும், பெற்றுச் செய்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும், குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கும், குரங்கணி அம்மன் கோவில் திருவிழாவிற்கும், ஏரல் அருணாச்சல சேர்மன் கோவில் திருவிழாவிற்கும் அடுத்த படியாக மக்கள் பெருந்திரளாக திரள்வது இத் திருவிழாவின் போது தான்.
அந்த அளவிற்கு உள்ளூர், வெளியூர் பக்தர்களின் தலைகள் கடல் அலைகளைப் போல் ஆர்ப்பரிக்கும். சித்திரை மாதம் தீப்பந்தத் திருவிழாவும், மார்கழி மாதம் படக்கஞ்சித் திருவிழாவும் இக்கிராம மக்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இக்கோவிலின் திருவிழா நிகழ்ச்சிகளை வெளியூரில் இருக்கும் இக்கிராம ஆண்களுக்கு மட்டும் அல்லாமல் இவ்வூரில் பிறந்து மணம் முடித்து வெளியூரில் இருக்கும் பெண்களுக்கும் அவர்கள் வீட்டிற்கே நிகழ்ச்சி அழைப்பிதழ்களை அனுப்பி விடுவது இக்கிராம மக்களின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு தமிழ் மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
திருவிழா நடக்கும் அனைத்து நாட்களும் மூன்று வேளையும் அன்னதானங்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதிகரித்துக்கொண்டே வரும் பக்தர்களின் கூட்டத்தைப் பார்க்கும் போது தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பாதக்கரை சுவாமி வரும் காலங்களில் தமிழகத்தின் நம்பிக்கை தெய்வமாக வளர்ந்து வருகிறார் என்பது மிகையல்ல.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்து மூலம் தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் செல்ல வேண்டும். தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் வழியாக உள்ளூர் பேருந்து மூலம் நாலுமாவடி சென்றால் இந்த கோயிலை அடையலாம்.
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்தில் மூலம் சென்றால் நாலுமாடியில் இந்ந கோயில் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுவாமி நாத சுவாமி கோயில்
» சுவாமி நாத சுவாமி கோயில்
» வைரவன் சுவாமி கோயில்
» சுப்பிரமணிய சுவாமி கோயில் - குன்றத்தூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum