தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக்கியமாக சிவன் கோவில்கள்

Go down

முக்கியமாக சிவன் கோவில்கள் Empty முக்கியமாக சிவன் கோவில்கள்

Post  birundha Wed Mar 27, 2013 1:32 pm

ஏகாம்பரேசுவரர் ஆலயம் காஞ்சி.....

கோவில்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயம் உள்ளது. முக்தித் தலங்கள் ஏழினுள் ஒன்று என்ற சிறப்புப் பெற்ற இடமாகும் பஞ்ச பூதத் தலங்களில் பிருதிவித்தலம் ஆகும். பார்வதி தேவி, லிங்கம் ஸ்தாபித்து பூஜித்த தலம். சுந்தரர் இடது கண் பார்வையை மீண்டும் பெற்ற தலம். இத்தலத்தில் வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும். கண் நோய்கள் விலகும்.

திருவேற்காடு..........

இங்கு வேதபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்தியர் இறைவன் திருமணக்காட்சி அருளப்பெற்ற தலங்களில் ஒன்றாகும். வேதங்கள், வழிபட்ட தலம், மூர்க்க நாயனார் அவதரித்த இடம் இது. இங்கே விஷ பயம் அறவே இல்லை. முருகன் சூரசம்ஹாரம் செய்தபின் வழிபட்ட இடமாகும். இத்தலத்தில் வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும்.

திருக்கழுக்குன்றம்.........

இங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது 500 அடி உயரம் உள்ள மலைக்குன்றில் ஆலயம் உள்ளது. வேதமே மலையாக உருவான தலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திரன் `இடிபூஜை' செய்யக் கூடிய தலம். மாணிக்க வாசகப் பெருமானுக்கு சிவபெருமான் குருவாகக் காட்சி அளித்த திருத்தலமாகும். மார்க்கண்டேயருக்கு அபிஷேகிக்க பாத்திரம் இல்லாது போன நிலையில், பெருமான் குளத்தில் சங்குதனைத் தோற்றுவித்தார். இங்கு வழிபட குரு பலம் அதிகரிக்கும்.

திருவாலங்காடு...........

திருவாலங்காடு ரெயில் நிலையத்துக்கு வடகிழக்கே 5 கி.மீட்டர் தூரத்தில் வடாரண்யேஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் காளியுடன் நடனம் புரிந்த தலமாகும். சிவபெருமானாலேயே `அம்மையே' என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் அம்பலவாணரின் திருவடியில் அமர்ந்துள்ள தலமாகும். இங்கு வழிபட மறைமுக தோஷங்கள் எல்லாம் பறந்தோடிவிடும்.

திருவண்ணாமலை.........

திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் ஆலயம் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாக உள்ளது. பிரமன் மற்றும் விஷ்ணுவின் அகங்காரத்தினை அழிப்பதற்காக சிவபெருமான் அடிமுடி அறியாதபடியான ஜோதிப்பிழம்பாய் எழுந்தருளிய திவ்ய தலம் திருவண்ணாமலை. பகவான் ஸ்ரீ ரமணர் சித்தியடைந்த தலம். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், தற்கொலை, செய்ய முயன்ற போது முருகனால் காப்பாற்றி அருளப்பட்ட தலம். அரசன் ஒருவனுக்கு இறைவனே மகனாகப் பிறந்த தலம். அம்பிகை தவம் செய்து இறைவனின் இடப்பாக்கம், பெற்று வரலாறு படைத்த திருத்தலம். இங்கு பவுர்ணமி கிரிவலம் வந்தால் கேட்டது கிடைக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum