தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயிலை சிங்காரவேலர்

Go down

மயிலை சிங்காரவேலர் Empty மயிலை சிங்காரவேலர்

Post  birundha Wed Mar 27, 2013 1:39 am

சென்னை மயிலாப்பூர், ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது. ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.

இருபுறமும் ஸ்ரீவள்ளி-தெய்வானை தேவியர் உள்ளனர். செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும் மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது. ஆதியில் ஆண்டிகள் நிறைந்த-அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.

இங்கே காலையில்-பாலனாக, நண்பகலில்-வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார். முருகன். பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார். எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல் என்கிறார்கள்.
திருப்போரூர் கந்தசாமி!

அகத்திய மாமுனிவர் ஒருமுறை, போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?' என்று கேட்டார், சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை. அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)' என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.

சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட! திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும். வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி.

சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது. கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருளபாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு-மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானின் வாகனமாகும் பேறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம் திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர். இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள். மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்; ஆனந்தம் பெருகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum