மயிலை அதிகார நந்தி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மயிலை அதிகார நந்தி
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள அதிகார நந்தி அழகான அமைப்பு கொண்டது. நுட்பமான வேலைபாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிகார நந்தி பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. கடந்த 1917ம் ஆண்டுக்கு முன்,இந்த நந்தி மர வாகனமாகவே இருந்தது.மயிலை பொன்னம்பல வாத்தியார் தெருவில் அப்போது குடியிருந்த வீரசைவ மரபைச் சேர்ந்த செ.குமாரசுவாமி இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம் போர்த்தும் பணியை நிறைவேற்றினார்.
இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருக்கு மேற்கில், 7 கி.மீ., தொலைவில் வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்தவர். 400 ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவின் ஒரு பகுதியில், பல்வேறு கெடுபிடி காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தன.
அவ்வாறு, ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் இருந்த தண்டரைக்கு குமாரசாமியின் முன்னோர் இடம் பெயர்ந்தனர். இவர்கள் 84 வாத ரோகங்கள் மற்றும் தோல்நோய்க்கு சித்த மருத்துவத்தோடு தொடர்புடைய எண்ணெய் மருத்துவ முறையை மேற்கொண்டு வந்தனர். அதனால் இவர்களின் குடும்பத்திற்கு தண்டரை வைத்தியக் குடும்பம் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது.
காலப் போக்கில், இதில் ஒரு குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதில் வைத்தியத்தோடு, இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தவர் தான் குமாரசுவாமி பக்தர். வைத்தியத் தொழிலில் வந்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை ஒதுக்கி சேமித்து, 1917-ல், 48 ஆயிரம் ரூபாய் செலவில் அதிகார நந்திக்கு குமாரசாமி வெள்ளிக் கவசம் செய்தார்.
இவரது வாரிசுகள் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழாவிற்கு மயிலைக்கு வந்து, அதிகார நந்தி வாகனத்தை சுத்தம் செய்து, அதற்குரிய வழிபாடுகளையும் செய்கின்றனர். பங்குனிப் பெருவிழாவில் மூன்றாவது நாள் அதிகாலையில் 6 மணிக்கு அதிகார நந்தியில்கபாலீசுவரர் எழுந்தருளும்போது, முதல் மரியாதை குமாரசுவாமி பக்தரின் குடும்பத்தினருக்கே அளிக்கப்படுகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மயிலை அதிகார நந்தி
» திருக்குறள் அதிகார விளக்கம்
» திருக்குறள் அதிகார விளக்கம்
» பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
» பால்மாவில் இரசாயனப்பதார்த்தம் உள்ளதா? சந்தேகத்தை நீக்க முயல்கிறது பாவனையாளர் அதிகார சபை
» திருக்குறள் அதிகார விளக்கம்
» திருக்குறள் அதிகார விளக்கம்
» பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
» பால்மாவில் இரசாயனப்பதார்த்தம் உள்ளதா? சந்தேகத்தை நீக்க முயல்கிறது பாவனையாளர் அதிகார சபை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum