தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்கு ஜோடியாகிறார் தீபிகா?

Go down

ரஜினிக்கு ஜோடியாகிறார் தீபிகா? Empty ரஜினிக்கு ஜோடியாகிறார் தீபிகா?

Post  ishwarya Tue Mar 26, 2013 6:13 pm



ரஜினியின் அடுத்தபடம் ‘கோச்சடையன் 3டி’ அணிமேஷன் படம் என்றும், இந்தப் படத்தில் ரஜினியுடன் சரத்குமார், இளம் கதாநாயகன் ஆதி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தார் ரஜினியின் மகள் சௌந்தர்யா.

அதேநேரம் இந்தப் படத்தில் ரஜியுடன் நடிக்க இருக்கும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பது யார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ரஜினியின் தங்கையாக சினேகாவும், ரஜினியின் இரண்டாவது நாயகியாக நடனத் தாரகை ஷோபனாவும் உறுதிசெய்யபட்டு விட்டதாகக் கூறினார் சௌந்தர்யா. அதேநேரம் முதன்மைக் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்று கேட்டபோது, காத்ரீனா கைப்பிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருகிறோம். அவர் நடிப்பது நிச்சயம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆனால் தற்போது காத்ரீனா 3டி அனிமேஷன் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாராம். இதனால் ராணா படத்துக்கு ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவை தற்போது முதன்மைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டார் சௌந்தர்யா. இதை அதிகார பூர்வமாக சௌந்தர்யா அறிவித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum