இன்னும் நான் லவ்வர்பாய் அல்ல-நடிகர் ரஹ்மான்
Page 1 of 1
இன்னும் நான் லவ்வர்பாய் அல்ல-நடிகர் ரஹ்மான்
புதுப் புது அர்த்தங்கள், நான் பாதி நீ பாதி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்தோம்.
இன்னும் பார்க்க அதே ரஹ்மானாகவே இருக்கிறார் என்று இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இனி அவரிடம்...
என்ன சார் உங்களை மீண்டும் பெரிய திரையில் பார்க்க முடியவில்லையே... ஏன்?
தற்போதும் சிலர் என்னிடம் காதல் கதைகளைக் கூறி நடிக்க கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இன்னும் நான் லவ்வர் பாய் அல்ல.. தற்போது பெண்களின் ரசனை மாறிவிட்டது என்று கூறிவிட்டேன்.
உங்களுடன் இணைந்து நடித்த நடிகர்களைப் பற்றி...
மலையாளத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளேன். தமிழிலும் மிகப்பெரிய நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளேன். ஒவ்வொருவரும் திரையில் தங்களது நடிப்பை மெருகேற்றுவதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாம் எனக்கு நல்ல அனுபவமாக இருக்கிறது.
இனி சினிமாவில்...
நிச்சயமாக என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பேன். எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த அழகான புன்னகையுடன் விடைபெற்றார் ரஹ்மான்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
» பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணி
» நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! – கமல்
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்
» நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
» பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணி
» நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! – கமல்
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்
» நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum