கழுகாசலமூர்த்தி கோவிலில்
Page 1 of 1
கழுகாசலமூர்த்தி கோவிலில்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கழுகாசலமூர்த்தி சுவாமி கோவில்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 17–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முதல் திருநாளில் பூஞ்சப்பரத்திலும், 2–ம் திருநாளில் பூத வாகனத்திலும், 3–ம் திருநாளில் அன்ன வாகனத்திலும், 4–ம் திருநாளில் வெள்ளி யானை வாகனத்திலும், 5–ம் திருநாளில் வெள்ளி மயில் வாகனத்திலும், 6–ம் திருநாளில் சோமஸ்கந்தர், அகிலாண்டேஸ்வரி ரிஷப வாகனங்களிலும், சுவாமி முருகன், வள்ளி, தெய்வானை அம்பாள் மேஷ வாகனத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
7–ம் திருநாளான 23–ந்தேதி மாலையில் சண்முக அர்ச்சனை, இரவில் வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சமாகவும், இரவு 12 மணிக்கு வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாக சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 8–ம் திருநாளான நேற்று முன்தினம் அதிகாலையில் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாக மலையை சுற்றி கிரிவலமாக சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கயிலய பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
9–ம் திருநாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 8.30 மணிக்கு கோ ரதத்தில் சண்டிகேஸ்வரர் பெருமானும், சட்ட ரதத்தில் விநாயகர் பெருமானும், வைர தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். காலை 10.00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ் ஆனந்தன், நகர பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தெற்கு ரதவீதி, பஸ் நிலைய ரோடு, அரண்மனை வாசல் தெரு, கீழ பஜார் வழியாக சென்ற தேர் மாலை 5.30 மணிக்கு கோவில் நிலையை சென்றடைந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று, தீர்த்தவாரி
10–ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தபசு காட்சி நடக்கிறது. 11–ம் திருநாளான நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், 12–ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தந்த பல்லக்கில் சுவாமி அம்பாள் பட்டணபிரவேசம், 13–ம் திருநாளான 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
» கோவிலில் பரிகார பூஜை.....
» திருப்பதி கோவிலில் நயன்தாரா!
» வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
» பேசும்பெருமாள் கோவிலில் 108 கோ பூஜை விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum