எல்லப்பநாயக்கன் குளம்,
Page 1 of 1
எல்லப்பநாயக்கன் குளம்,
எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து திருச்செந்தூரில் வருகிற ஏப்ரல் 1–ந் தேதி(திங்கள்கிழமை) உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆழ்குழாய் கிணறு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்தில் எல்லப்பநாயக்கன் குளமும் மற்றும் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்தில் ஆவுடையார் குளமும் உள்ளன. இவை இரண்டும் சுற்று வட்டார பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீருக்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உப்பு நீராகாமல் இருக்கவும் பெரிதும் பயன்படும் வகையில் நீர் ஆதாராமாக உள்ளது. தற்போது இந்த இரண்டு குளங்களும் வறண்டு தண்ணீர் இல்லாத நிலையில் உள்ளது.
எல்லப்பன்நாயக்கன் குளத்தில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதிகளான அமலிநகர், ஆலந்தலை, சுனாமிநகர், தோப்பூர், ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 6 ஆழ்குழாய் கிணறுகளும், திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட வீரபாண்டியன்பட்டணம், வீரபாண்டியன்பட்டணம்(ரூரல்), மேலத்திருச்செந்தூர், பிச்சிவிளை ஆகிய பஞ்சாத்துகளுக்கு மொத்தம் 11 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் உடன்குடி நகர பஞ்சாயத்து பகுதிக்கு 2 ஆழ்குழாய் கிணறுகளும், உடன்குடி யூனியனுக்குட்பட்ட மணப்பாடு, குலசேகரன்பட்டணம், பரமன்குறிச்சி, நயினார்பத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, ஆதியாக்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் 16 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த எல்லப்பன்நாயக்கன் குளத்தில் 13 பஞ்சாயத்துகள் மற்றும் இரண்டு நகர பஞ்சாயத்து பொது மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஆவுடையார் குளத்தில் இருந்து திருச்செந்தூர் நகரத்திற்கு 2 ஆழ்குழாய் கிணறும், வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்துக்கு ஒரு ஆழ்குழாய் கிணறும், வீரபாண்டியன்பட்டணம் ரூரல் பஞ்சாயத்துக்கு ஒரு ஆழ்குழாய் கிணறும் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரத போராட்டம்
இந்த வருடம் எல்லப்பநாயக்கன் குளத்திலும், ஆவுடையார் குளத்திலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகாமையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள கடல்நீர் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உண்டாகியுள்ளது. இதனை தடுக்க இவ்விரு குளங்களுக்கும் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகின்ற ஏப்ரல் 1–ந் தேதி(திங்கள்கிழமை) திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற உள்ளது. எனது (அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்) தலைமையில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள உண்ணாவிரதத்தை மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி துவக்கி வைக்கிறார். போராட்டத்தில் விவசாய பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum