நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
Page 1 of 1
நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
மாசி மகத் தினம் என்பதே சிறப்பான ஒன்றுதான். இந்த தினத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். இந்த தினத்தில் கும்பகோணத்தில் சிறப்பான திருவிழா ஒன்று நடைபெறும். கும்பகோணத்தின் நடுவில் உள்ள தீர்த்தக் குளத்தின் பெயர் மகாமக குளம் ஆகும்.
இப்பூவுலகில் வாழும் மக்கள் தாங்கள் புரிந்த பாவங்கள் அனைத்தையும், புண்ணிய நதிகளில் மூழ்கி கழுவிக்கொள்கின்றனர். ஆனால் அந்த பாவங்களை பொறுக்க முடியாத புண்ணிய நதிகள் பெரும் சிரமத்தை அடைந்தன. அந்நதிகள் சிவபெருமானை வேண்டியதன் பேரில், அவர் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடி, பாவத்தை போக்கிக்கொள்ளும்படி அருள் புரிந்தார்.
அதன்படி கோதாவரி, காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி, சரயு, புஷ்கரணி, நர்மதா, குமரி ஆகிய 9 நதிகளும் இந்த மகாமக குளத்தில் வந்து தங்கி தங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதாக ஐதீகம் கூறப்படுகிறது. புண்ணிய நதிகள் பாவம் போக்கும் இந்த நதியில் ஞானிகளும், மக்களும் கூட நீராடுகின்றனர்.
சரி... நதிகளில் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்களை பொறுக்க முடியாமல் நதிகள் அனைத்தும் இங்கு வந்து பாவங்களை கழுவுகின்றன. இந்த நதியின் பாவம் பின் எங்கு போகும்? இந்த தீர்த்த குளத்தில் ஞானாக்கினிதேவன் நிலைபெற்றுள்ளார். ஞானாக்கினிதேவன், இக்குளத்தில் எக்காலமும் இருந்து மக்களுடைய பாவங்களை எரிக்கும்படி, சிவபெருமானால் கட்டளையிட்டு அருளப்பட்டவர்.
ஆகையால் ஞானாக்கினி தேவன் அங்கிருந்து கொண்டு நதிகள் கழுவிவிட்ட பாவங்களையும், மக்களுடைய பாவங்களையும் எரிக்கின்றார். மேலும் ஒவ்வொரு மாமாங்கத்தின் போதும், அதாவது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஞானாக்கினி தேவனால் இந்த குளத்தில் புதிய நீர்மயமான நீர்ப்பெருக்கு உண்டாக்கப்படுகின்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாவம் போக்கும் கச்சனம் தீர்த்தங்கள்
» பாவம் போக்கும் மாசிமகம்
» முன்னோர் பாவம் போக்கும் ஸ்ரீதேவி பாகவதம்
» பாவம் போக்கும் சித்ரா பவுர்ணமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum