தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்கள் குறைதீர்க்கும் நாள்

Go down

மக்கள் குறைதீர்க்கும் நாள் Empty மக்கள் குறைதீர்க்கும் நாள்

Post  meenu Tue Mar 26, 2013 5:50 pm

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை கலெக்டர் சி.சமயமூர்த்தி வழங்கினார்.

கருணை அடிப்படை

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கூட்டத்தில் மூலக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து செயல் அலுவலராக பணிபுரிந்த வந்த ச.கனகசபாபதி கடந்த 17.03.2010 அன்று பணியில் இருந்த போது மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவருடைய மகன் மகன் மகாராஜா சுந்தரநாயகம் என்பவருக்கு கருணை அடிப்படையில் புதூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

திருமண உதவித்தொகை

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பட்டம் மற்றும் பட்டயம் படித்த, 3 பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் திருமண நிதி உதவி மற்றும் ரூ.20 ஆயிரத்திற்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஆக மொத்தம் தலா ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படித்த 2 பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் திருமண நிதி உதவியும், ரூ.10 ஆயிரத்திற்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஆக மொத்தம் ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் ஆகியவையும் வழங்கப்பட்டது. இதை கலெக்டர் சி.சமயமூர்த்தி வழங்கினார்.

18 பேருக்கு உதவிதொகை

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் நெல்லை அருகே உள்ள சங்கர்நகரைச் சார்ந்த ந.சண்முகம் என்பவருக்கு இலவச தேய்ப்பு பெட்டியும், நெல்லை தாலுகாவை சேர்ந்த 9 பேருக்கும், பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 9 பேருக்கும் ஆக மொத்தம் 18 பேருக்கு மாதந்தோறும் முதியோர் மற்றும் விததை உதவித் தொகையாக ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளையும் கலெக்டர் சி.சமயமூர்த்தி வழங்கினார்.

தேய்ப்பு பெட்டியை வாங்கிய சண்முகத்திடம், இந்த பெட்டியை வைத்து தேய்த்துவிடுவீர்களா? தேய்த்து காட்டுங்கள் என்று கூறினார். உடனே அந்த சண்முகம் என்பவர் கலெக்டரிடம் தேய்ப்பு பெட்டியை வாங்கி இப்படி தேய்க்க வேண்டும் என்று கூறி செய்து காட்டினார்.

ஊனமுற்றோர் உதவித்தொகை

இதைத்தொடர்ந்து ஊனமுற்றோர் உதவித்தொகை பெற வந்தவர்களால் கூட்ட அரங்கிற்கு செல்லமுடியாததால் அவர்கள் வெளியே இருந்தனர். அவர்களுக்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து உதவித்தொகையை வழங்கினார். ஒருவர் ஆட்டோவில் இருந்தார் அவருக்கு ஆட்டோவிற்கு சென்று வழங்கினார். ஊனமுற்றோர் முதியோர் உதவி தொகை வாங்கிய 2 கால்களையும் இழந்த ஒருவரிடம், இனி நீங்கள் பிச்சை எடுக்கக்கூடாது, அதற்காக தான் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமாமகேசுவரி, நகரபஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி.நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை, தாசில்தார்கள் தாமோதரன், ஜாகீர்உசேன், சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum