லட்சுமி பூஜை செய்யுங்கள்
Page 1 of 1
லட்சுமி பூஜை செய்யுங்கள்
"அட்சயம்'' என்றால் "வளர்வது'' என்று பொருள். அட்சய திருதியை தினத்தன்று நாம் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும், பெருகும் என்பது ஐதீகம். எனவே தான் அட்சய திருதியை திருநாளை அள்ள அள்ள குறையாமல் அள்ளித்தரும் அற்புத திருநாள் என்று போற்றுகின்றனர்.
2011-ம் ஆண்டுக்கான அட்சய திருதியை தினம் வரும் 6-ந்தேதி வருகிறது. பொருளை தேடிக்கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது.
நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்குக் கொடுக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மற்ற நாட்களில் நீங்கள் 10 சதவீதம் தான, தர்மம் செய்தால், உங்களுக்கு 10 சதவீத புண்ணிய பலனே கிடைக்கும்.
ஆனால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தை தேடித்தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். எனவே வரும் 6 -ந்தேதி காலை, மாலை இரு நேரமும் மறக்காமல் லட்சுமி பூஜை செய்யுங்கள். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
திருதியை பிரசாதம்:
அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.
அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.
ஆனால் இந்நாளில் இறைவா உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகம். எனவே மற்ற நாட்களில் படைப்பதை விட அட்சய திருதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லட்சுமி பூஜை செய்யுங்கள்
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» நிஜமான லட்சுமி பூஜை
» லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum