தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள்

Go down

லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள் Empty லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள்

Post  meenu Fri Jan 18, 2013 2:28 pm

தீபாவளி அன்று லஷ்மி குபேர பூஜை செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். தனது தாயிடம் இருந்து நவநிதியங்களைப் பெற்றவர் குபேரர். அவரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் நவநிதியங்களையும் அள்ளித்தருவார். உன்னதம் நிறைந்த லஷ்மி குபேர பூஜை பற்றி பிரபல ஜோதிடர் சதீஷ்குமார் கூறியதாவது:-

திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன். குபேரன் லட்சுமி தேவியின் பரமபக்தனாக பூஜித்து வந்ததால் தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன் என்பது மட்டுமின்றி குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கி வறுமை ஓழியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

இதற்கு ஓரே வழி செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் போயே போச்சு என்று நம்பிக்கையுடன் கூறிக் கொள்ள முடியும்.

லட்சுமி-குபேர பூஜைக்கு வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். நைவேத்தியம் செய்யும் போது கடினமான பதார்த்தங்களை நைவேத்யம் செய்யாமல் மாவுப்பொருட்களைத் தயாரித்து நைவேத்தியம் செய்வது சிறந்தது.

பூஜை செய்யும் முறை..........

லட்சுமி-குபேர பூஜைக்காக இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை பசுஞ்சாணியால் மெழுகி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு இந்த பூஜை செய்யும் இடத்தில் முதலில் பதினாறு கையளவு மண்டபம் ஒன்றை அமைத்து அதன் நான்கு புறங்களிலும் மாவிலை, வாழைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

மண்டபத்தின் பக்கத்தில் நான்கு மூலைகளைக் கொண்ட நான்கு கையளவு உயரமான மேடையை அமைத்து அதில் இரண்டு கையளவு நீளம்-அகலம் உள்ள மேடையில் சாந்தி கலசத்தை வைக்க வேண்டும். இந்த கலசத்தின் உள்ளே புஷ்ப- அட்சதைகளால் நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு மாவிலையால் அலங்கரித்து ஒரு நூல் இழையைச் சுற்றி ஒரு தண்டினையும் சாற்ற வேண்டும்

அதன் மேல் ஒரு தேங்காயையும் வைக்க வேண்டும். இந்த சாந்தி கலசத்தின் பக்கத்தில் ஈசான பாகத்தில் ஒரு கையளவு உயர மேடை நவகிரகங்களுக்கு பூஜிக்கும் படியாக அமைத்து இரண்டு கையளவு நீள கலசங்களுடன் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் எட்டு இதழ்களுடைய தாமரையை கோலமிட்டு வர்ண அரிசி மாவினால் அழகுபடுத்தி அதன் மேல் சாந்தி கலசத்தை வைக்க வேண்டும்.

இதன் பக்கத்தில் மகாலட்சுமி- குபேரனுடைய படமோ பிரதிமையோ அல்லது எந்திரமோ எதுவாக இருந்தாலும் அதனை வைத்து மலர்மாலைகளுடன் மஹா மேடையில் சாந்தி கலசத்தை வைக்க வேண்டும். க்ரஹவேதியின் கிழக்குப் பக்கத்தில் தான் சாந்தி கலசத்தை வைக்க வேண்டும்.

இந்த கலசங்கள் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், ஈயம், மண் இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று சாத்திரம் கூறுகிறது. பூஜையை செய்யும் போது கலசத்தின் வடகிழக்கில் அமர்ந்து கலசத்தை ஆவாஹனம் (எழுந்தருளச் செய்தல்) செய்ய வேண்டும்.

விக்னேஷ்வர பூஜையைத் பூர்வாங்கம் அங்க வந்தனம் ஸ்ரீவிஷ்ணு த்யானம் சங்கல்பம் செய்து சனபூஜை கண்டா (மணி) பூஜையுடன் ஆவாஹனம் செய்து உபசார பூஜை அர்ச்சனை முடித்த பின்பு பிரதான பூஜையில் தியானத்துடன் ப்ராணாயாமம் சங்கல்பம் செய்து பூஜையை உத்யாபனம் எனப்படும் வழியனுப்பும் மந்திரங்களைக் கூறி முடிக்க வேண்டும்.

கலசத்தை ஆவாஹனம் செய்து கலச பூஜையை முறைப்படி துவக்கி, ஷோடச (16) மாத்ரு கண பூஜா மந்திரங்களைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். பின்னர் நவக்கிரகங்களை பூஜிக்கும் விதத்தில் கோதுமையில் சூரியன் அரிசியில் சந்திரன், துவரையில் அங்காரகன், பச்சைப்பயிரில் புதன், கடலையில் பிருஹஸ்பதி, மொச்சையில் சுக்ரன், எள்ளில் சனி, உளுந்தில் ராகு, கொள்ளில் கேது, என்று ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

அடுத்து லோகபால பூஜையை முடித்த பின்பு லட்சுமி தேவி பூஜையை தியானத்துடன் துவக்கி லட்சுமியை ஆவாஹனம் செய்து, பூஜா விதிகளுடன் அங்க பூஜை, அஷ்டோத்திர நாமாவளி செய்து மகாலட்சுமி கவசம் கனகதார ஸ்தோத்திரம் போன்ற ஸ்லோகங்களை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும். ஈசாநாதி பூஜையை ஷோடச உபசாரங்களுடன் செய்து முடிக்க வேண்டும்.

ஸ்ரீகுபேர பூஜையை செய்ய வடக்குப் பக்கத்தில் குபேரனுடைய பிரதிமை அல்லது படத்திற்கு பூஜை செய்யலாம். ஒரு கூர்ச்சத்தில் குபேரனை ஆவாஹனம் செய்து, பூஜை விதிப்படி உபசாரங்களை செய்து பின்பு குபேராஷ்டோத்திர சத நாமாவளியால் அர்ச்சனை செய்து, பூஜையை முடித்தபின்பு மகாலட்சுமி -குபேரனை மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

உபசாரங்கள் ஏதாவது செய்திருந்தால் பிழை பொறுத்தருளவும் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜை முடிந்த பின்பு அவரவர்கள் சக்திக்கு ஏற்ப சுமங்கலிப் பெண்களுக்கும், பூஜைக்கு வரும் பக்தர் களுக்கும் தாம்பூலம், குங்குமம் அளித்து வழி அனுப்ப வேண்டும்.

பூஜையன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ தன்னால் முயன்ற நிவேதனங்களை செய்து தூப, தீப, கற்பூர ஆரத்தி எடுத்து வடக்கு முகமாக மகாலட்சுமியையும், குபேரனையும் நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க ஒவ்வொரு இல்லத்திலும் மகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் பரந்தாமனின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு தழைத் தோங்கும் என்பதே உண்மை

பூஜைக்கு உகந்த நேரம்.........

லஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் நாளை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகும். செல்வம் அனைத்தையும் தரும் சுக்கிரன் புதனோடு சேர்ந்து குருவால் பார்க்கப்படக்கூடிய மிகச்சிறந்த நேரமாக இது அமைந்துள்ளது. இதே நேரத்தில் குபேரனுக்கு தீபாராதனையும் செய்வதும் சிறப்பானதாகும்.

இரவு 8 மணி முதல் 9 மணி வரை பிரார்த்தனை செய்ய உகந்த நேரமாகும் தீப ஒளித் திருநாளில் லஷ்மி குபேர பூஜை செய்து சகல செல்வங்களை பெறுவோம். நாட்டில் மழை வளத்தை பெருக்கச் செய்யவும் லஷ்மி குபேர பூஜை நல்லது

பலன்கள்........

தீபாவளி அன்று செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி, வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum