மாணவர்களுக்கு வழங்கப்பட்ட
Page 1 of 1
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டாதா என்பது குறித்து உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முப்பருவ கல்வி
தமிழகத்தில் 2012–13 ஆம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி என்ற திட்டத்தின் கீழ் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதாவது மூன்று பருவங்கள் கொண்ட இந்த புத்தகங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் ஒரு புத்தகமாகவும், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு ஆகிய பாடப்புத்தகங்கள் தனித்தனியாகவும் வழங்கப்பட்டன.
பருவம்
இதன் அடிப்படையில் ஒரு பருவத்தின் தேர்வு முடிவடைந்த பிறகு அடுத்த பருவத்துகான புத்தகங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஒரு சில பள்ளிகளில் ஒரு பருவம் முடிந்த நிலையில் அடுத்த பருவத்துக்கான புத்தகங்களை வினியோகம் செய்யும் போது, முந்தைய பருவத்துக்கான புத்தகங்களை ஆசிரியர்கள், மாணவர்களிடம் இருந்து திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க முடியாத சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.ஞானகவுரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
ஆய்வு
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களால் பெறப்பட்ட புத்தகங்கள் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் படிக்கும் வகையில் வழங்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் இது மாதிரியான செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் அந்தந்த ஒன்றியங்களைச் சேர்ந்த உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வுகளின் முடிவில் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீதிகளுக்குப் பொருத்த வழங்கப்பட்ட மின்விளக்குகளை வீட்டுவாசலில் பொருத்திய பிரதேச சபை உறுப்பினர்கள்
» மாணவர்களுக்கு நேர மேலாண்மை
» மாணவர்களுக்கு கண்ணதாசன்
» மாணவர்களுக்கு சுய முன்னேற்றக் கலை
» மாணவர்களுக்கு காமராஜர்
» மாணவர்களுக்கு நேர மேலாண்மை
» மாணவர்களுக்கு கண்ணதாசன்
» மாணவர்களுக்கு சுய முன்னேற்றக் கலை
» மாணவர்களுக்கு காமராஜர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum