வீதிகளுக்குப் பொருத்த வழங்கப்பட்ட மின்விளக்குகளை வீட்டுவாசலில் பொருத்திய பிரதேச சபை உறுப்பினர்கள்
Page 1 of 1

இருள்சூழ்ந்திருக்கும் வீதிகளுக்குப் பொருத்துவதற்காக வழங்கப்பட்ட மின்விளக்குகளைப் பிரதேசசபை உறுப்பினர்கள் தமது வீட்டுவாசலில் பொருத்தி அழகுபார்க்கும் விநோதச் சம்பவம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அரங்கேறியுள்ளது.
நல்லூர் பிரதேச உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மின்குமிழ்கள் சில உறுப்பினர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெற்றபோது உரையாற்றிய உபதவிசாளர் திருமதி கோமதி ரவிராஜ் சில உறுப்பினர்கள் தமது உறவினர்களின் வீட்டைச் சுற்றி சுமார் இருபது வரையிலான மின் குமிழ்களைப் பொருத்தியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கி.தர்மரத்தினம் என்னும் உறுப்பினர் உரை நிகழ்த்துகையில் சபை உறுப்பினர்ககளுக்கு வழங்கப்பட்ட மின் குமிழ்களின் தொகை எவ்வளவு, அவை எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளன, மின்சார சபையினால் பூட்டப்பட்ட மின் குமிழ்கள் எங்கே, எத்தனை போன்ற விபரங்களை அடுத்த மாதாந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தல் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, கல்வியங்காடு பருத்தித்துறைவீதி - புதிய செம்மலை வீதி சந்தி தொடர்ந்து பல மாதாங்களாக இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் சற்றுத் தள்ளி சுமார் 50 மீற்றர் தூரத்துக்குள் பருத்தித்துறை வீதியிலிருந்து சிறு ஒழுங்கைக்குள் உள்ள தனியார் ஒருவரின் வீட்டுக்கு முன்பாகவும், ஒழுங்கை முகப்பிலும் இப்பகுதியிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சிபார்சின் பேரில் இரண்டு மின் குமிழ்கள் பூட்டப்பட்டிருப்பதாகப் பிரதேச மக்களினால் மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்தி அதிகளவு வாகனப் போக்குவரத்தும், நடமாட்டமும் மிகுந்த பகுதியாகும். இரவில் வெளிச்சமின்றி இருப்பதால் பல விபத்துக்கள் நடைபெற்றுப் பலர் படுகாயமடைவது சர்வசாதாரணமாகியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை

» குர்ஆனை இழிந்துரைத்த பொதுபல சேனா, ராவண பலய முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக சட்டநடிக்கை எடுக்கப்படும்! - அஸாத் ஸாலி
» மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!
» தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் – உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum