இன்னொரு பஸ்சை முந்தி செல்ல
Page 1 of 1
இன்னொரு பஸ்சை முந்தி செல்ல
அதிவேகமாக சென்ற பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண், அதே பஸ்சில் அடிபட்டு இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை தீவைத்து கொளுத்தினார்கள்.
அதிவேகமாக சென்ற பஸ்
கோவை மாவட்டம் காரமடையை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் ஹேமலதா(வயது20). துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள செயற்கை வைர தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.நேற்று காலை 7–30 மணியளவில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஹேமலதா ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சின் உள்ளே ஹேமலதா நின்றுகொண்டு இருந்தார். அப்போது பஸ்சை டிரைவர் அதிவேகமாக ஓட்டிச்சென்றார்.
இளம்பெண் சாவு
சின்னமத்தம்பாளையம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற அரசு பஸ்சை தனியார் பஸ் டிரைவர் முந்த முயன்றார். அப்போது வளைவில் திரும்பும்போது தனியார் பஸ் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.இதனால் பஸ்சுக்குள் இருந்த இளம்பெண் ஹேமலதா நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டு ரோட்டில் வந்து விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் ஹேமலதா மீது ஏறி இறங்கியது. இதனால் உடல் நசுங்கியும், தலைசிதறியும் சம்பவ இடத்திலேயே ஹேமலதா பரிதாபமாக இறந்தார்.மற்றொரு பெண் பயணி மரகதம் என்ற பெண்ணும் ரோட்டில் விழுந்தார். இருந்தாலும் சிறு காயத்துடன் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இளம்பெண் உடல் நசுங்கி இறந்ததை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இருந்தபோதிலும் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் தொடர்ந்து வேகமாக ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினரும் பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி வந்து மறித்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.
தீவைத்து கொளுத்தினர்
ஆத்திரத்தில் இருந்த பொதுமக்களும், பயணிகளும் தனியார் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பஸ்சுக்கும் தீவைக்கப்பட்டது. இதனால் பஸ் கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் பஸ் டிரைவர் சந்தோஷ்குமாரை பிடித்து தர்ம அடிகொடுத்தனர். கண்டக்டர் பாபுவையும் தாக்க முயன்றனர். இதனால் கண்டக்டர் தப்பி ஓடிவிட்டார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருந்தாலும் பஸ் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
மறியல் போராட்டம்
விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பலியான ஹேமலதாவின் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கோயில்பாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்அதிவேக பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது தொடர்பாகவும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காலத்திற்கு ஒருநாள் முந்தி
» முந்தி வந்து அருள்வாள் முத்தியாலம்மன்
» இன்னொரு போர்வாள்
» இன்னொரு சென்னை
» இன்னொரு பக்கம்
» முந்தி வந்து அருள்வாள் முத்தியாலம்மன்
» இன்னொரு போர்வாள்
» இன்னொரு சென்னை
» இன்னொரு பக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum