தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றிபெறாத படங்கள் பெற்ற விருது

Go down

வெற்றிபெறாத படங்கள் பெற்ற விருது Empty வெற்றிபெறாத படங்கள் பெற்ற விருது

Post  ishwarya Tue Mar 26, 2013 5:14 pm



59வது தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது பல தமிழ் திரைப்பட ரசிகர்களின் பார்வைகளும் சுருங்கின. அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் நடித்த அப்புக் குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், சிறந்த படத்தொகுப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.

ஆமாம்.. அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோ யார் என்றும், ஆரண்ய காண்டமா அது எப்போது வந்தது என்றும் நிறைய பேர் கேட்டார்கள்.

உண்மையில், தமிழில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்குத்தான் இந்த தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. விருதுக் குழுவிற்குத் தெரிந்துள்ள பல விஷயங்கள் நம் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்.

ஒரு கிராமத்தில் உள்ள அழகர்சாமி கோயில் குதிரை வாகனமும், அழகர்சாமியின் பொதி சுமக்கும் குதிரையும் ஒரு சேர காணாமல் போகிறது. அவற்றை தேடுவதையும், அவை தொலைந்து போனதால் ஏற்படும் பின்னணிகளையும் நகைச்சுவை கலந்த யதார்த்ததுடன் எடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இதில் மிக யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து அல்ல வாழ்ந்துள்ளார் அப்புக்குட்டி. அந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து விருது வழங்கியுள்ள தேர்வுக்குழுவிற்கு நிச்சயம் நமது பாராட்டுக்களைக் கூறியே ஆக வேண்டும்.

அதேப்போல, மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் ஆரண்ய காண்டம். தாதா கும்பல், போதைப் பொருள் கடத்தல் என்று பல்வேறு கதைகளை ஒன்றாக முடிச்சுப் போட்டு நேர்த்தியாக பின்னப்பட்ட ஒரு நல்ல கூடை. ஆனால் சந்தையில் விலைபோகாமல் போனது துரதிருஷ்டம். அதற்கு நல்ல விளம்பரம் இல்லாததும், போஸ்டர்களில் உள்ள மாயாஜால வித்தைகளுமே மக்களை படம் சென்று சேரவில்லை என்று கூற வேண்டும். ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் மனதிற்குள் பிரம்மித்த படமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

மேடையில் நல்ல தமிழ் படம் வேண்டும் என்று முழக்கமிடும் இயக்கங்கள் இப்படிப்பட்ட படங்கள் வெளியாகும் போது அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், எந்த இயக்குநருக்கு இதுபோன்ற படங்களை எடுக்க ஆர்வம் வரும்.

தமிழ் ரசிகர்கள் கைவிட்டாலும், தேசிய விருதுகள் இப்பட இயக்குநர்களுக்கு ஒரு நல்ல ஊக்கத்தை அளித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இனியாவது நல்ல படங்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு இதுபோன்ற இயக்குநர்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum