மின்வெட்டு பிரச்சினை ஜூன் இறுதிக்குள்
Page 1 of 1
மின்வெட்டு பிரச்சினை ஜூன் இறுதிக்குள்
மின்வெட்டு பிரச்சினை ஜூன் மாத இறுதிக்குள் சரிசெய்யப்பட்டு விடும் என்று சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி அளித்தார்.
மின்வெட்டு பிரச்சினை
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ஏ.பாலகிருஷ்ணன், மின்வெட்டு பிரச்சினை காரணமாக மாநிலத்தின் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மின்வெட்டு பிரச்சினை 2014 ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அப்போது மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறியதாவது:–தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் தற்காலிக மின்வெட்டு பிரச்சினைக்கு அ.தி.மு.க. அரசு காரணம் அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு ஒட்டுமொத்த மின்உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. 180 மில்லியன் யூனிட்டாக இருந்த தினசரி மின்உற்பத்தியின் அளவு, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், சீரமைப்பு திட்டங்கள் காரணமாக இன்று 220 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
மின்தேவை அதிகரிப்பு
தற்போது கோடைகாலம் என்பதால் மின்தேவை அதிகரித்து இருக்கிறது. மின்தேவை 11,500 மெகாவாட்டில் இருந்து 12,500 மெகாவாட்டாக கூடியுள்ளது. கடந்த ஒருவாரமாக மின்உற்பத்தியில் சற்று பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.மத்திய அரசின் மின்திட்டங்களாக கைக்கா அனல்மின் நிலையம் மற்றும் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேபோல், ரேணுகொண்டா அனல்மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்உற்பத்தி குறைந்துள்ளது.
ஜூன் இறுதியில் சரியாகிவிடும்
எனவே, மின்உற்பத்தி பின்னடைவுக்கு காரணம் மத்திய அரசின் மின்திட்டங்களால்தான் காரணமே ஒழிய தமிழக மின்திட்டங்களால் காரணம் அல்ல. வல்லூர் அனல்மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்கசிவு இரண்டு மூன்று நாளில் சரிசெய்யப்படும். தொடர் நடவடிக்கைகளால் மின்வெட்டு நேரம் படிப்படியாக குறைக்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிடும்.இவ்வாறு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கூறினார்.
காலக்கெடு முடிந்தும் சுங்கவரி வசூல்
பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் வி.பொன்னுபாண்டி, ‘‘தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் சுங்கவரி வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மின்வெட்டு பிரச்சினை ஜூன் இறுதிக்குள்
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» ஜூன் 2 சகுனி ஆடியோ
» ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
» ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்
» ஜூன் 17-ல் ‘அவன் இவன்’!
» ஜூன் 2 சகுனி ஆடியோ
» ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
» ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum