`555' பரத்தின் மறு அவதாரப் படம்
Page 1 of 1
`555' பரத்தின் மறு அவதாரப் படம்
பரத் சமீபத்தில் வெளியான அரவாண் படத்தில் காட்டுவாசி போன்று நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார். அதேப்போல அடுத்து அவர் நடித்து வரும் 555 (ஐந்ஐ, ஐந்து, ஐந்து) படமும் தமிழ் திரைப்பட வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் சசி.
இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய ஓராண்டாக நடந்து வருகிறது. இன்னமும் படப்பிடிப்பு முடியவில்லையே ஏன் என்று கேட்டால், பரத் ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. அதனால்தான் என்கிறார்கள் படக்குழுவினர்.
பூ படத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ள சசி, இப்படம் குறித்து மனம் திறக்கிறார்...
இப்படத்தில் பரத்தின் கதாபாத்திரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தைப் பற்றி வேண்டுமானால் கூறலாம், அதாவது இப்படம் முற்றிலும் மாறுபட்ட சாதாரண பொழுதுபோக்கு படத்தைப் போல் அல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அது என்ன மாறுபட்ட படம் என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியுமா? கேட்டோம்.
ரோஜா கூட்டம், பூ படங்கள் அனைத்தும் கதையை மையப்படுத்திய படமாக இருக்கும். இது ஒரு ஹீரோயிச ஆக்சன் படமாக இருக்கும் என்றார். டைட்டில் பற்றி கேட்டால், இந்த படத்திற்கு எந்த பெயரை வைத்தாலும் அது வேறு விதமான எதிர்பார்ப்பை அல்லது சிந்தனையை ஏற்படுத்தி விடும். அதனால்தான் மிகவும் பொறுத்தமான 555 என்று பெயரிட்டுள்ளேன் என்கிறார்.
இப்படம் அமெரிக்காவிலும் சாந்தினி என்ற பெயரில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சாந்தினி என்று கூடுதல் தகவலை அளித்தார் நமக்காக.
555 படங்களின் தரவரிசையில் எந்த எண்ணைப் பிடிக்கிறது பார்க்கலாம்...
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமாலின் அவதாரப் பெருமைகள்
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» பரத்தின் சகோதரராக சந்தானம்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
» இதுதான் காதல் நாயகன் பரத்தின் லட்சியமாம்!
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» பரத்தின் சகோதரராக சந்தானம்
» மொட்டை – பரத்தின் புது கெட்டப்
» இதுதான் காதல் நாயகன் பரத்தின் லட்சியமாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum