தொல்காப்பியச் சுவடிகள், பதிப்புகள்
Page 1 of 1
தொல்காப்பியச் சுவடிகள், பதிப்புகள்
தமிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியத்தை விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து இந்த அரிய நூலை தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் எழுதியுள்ளார். தமது ஆராய்ச்சி மூலமாக, தொல்காப்பியரின் காலம் கி.மு.5320 என்று உறுதிப்படுத்துகிறார். தொல்காப்பியத்தின் 113 சுவடிகள் பல்வேறு இடங்களில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதாகவும், அவற்றில் 51 சுவடிகளை பார்த்து, படிக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், உரைகளில் காணப்படும் மாறுபாட்டையும் சுட்டிக்காட்டி உள்ளார். தொல்காப்பிய பாடல்களின் மூலமும், உரையும் இடம் பெற்றுள்ள இப்புத்தகத்தில், தொல்காப்பியம் பற்றிய சிறப்புச் செய்திகள் ஏராளமாக உள்ளன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு அவசியமான இந்நூல், ஒவ்வொரு நூலகத்திலும் இடம் பெறுதல் நலம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum