தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவை புகழும் குஷ்பு

Go down

அனுஷ்காவை புகழும் குஷ்பு Empty அனுஷ்காவை புகழும் குஷ்பு

Post  ishwarya Tue Mar 26, 2013 2:11 pm



இன்னாள் கனவுக் கன்னியாக அனுஷ்காவைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் முன்னாள் கனவுக் கன்னியும், இன்னாள் அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான குஷ்பு.

சினிமாவில் திறமையை வெளிப்படுத்தி முழு ஒத்துழைப்புடன் நடிக்கும் நடிகையை பார்ப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அனுஷ்காவிடம் அந்த குணங்கள் இருக்கிறது என்று குஷ்பு கூறியுள்ளார்.

இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால்... தற்போது குஷ்பு தயாரித்து சுந்தர் சி இயக்கி மாதவன் - அனுஷ்கா நடிக்கும் ரெண்டு படப்பிடிப்பில் தான் என்கிறார் குஷ்பு.

இப்படத்தின் ஷுட்டிங் ஒரு சிறிய தீவில் நடந்து கொண்டிருந்தது. இந்த படப்பிடிப்பின்போது, அனுஷ்காவிற்காக தயாரான ஆடைகள் அவருக்கு சரியாக இல்லை. ஆனால், அந்த சிறிய தீவில் என்ன உடை கிடைத்ததோ அதை போட்டுக் கொண்டு எந்த பிரச்சினையும் செய்யாமல் முழு ஒத்துழைப்போடு நடித்துக் கொடுத்தார். இதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்கிறார் குஷ்பு.

அதோடு இல்லாமல், ஒரு பாடல் காட்சிக்காக அனுஷ்கா உடல் முழுவதும் மணலில் புதைந்து இருக்க வேணடும். இதற்காக பல மணி நேரம் அவர் மணலில் புதைந்து இருந்தார். அந்த சமயத்தில் அவர் முகத்தில் ஒரு சுளிவைக் கூடக் காட்டாமல், மிகவும் சந்தோஷமாக நடித்துக் கொடுத்துள்ளார். பொதுவாக இதுபோன்ற ஹீரோயின்கள் கிடைப்பது மிகவும் அரிது என்கிறார் குஷ்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum