கோபாலுக்கு வனயுத்தம் படத்தை காண்பிக்க நீதிபதி உத்தரவு
Page 1 of 1
கோபாலுக்கு வனயுத்தம் படத்தை காண்பிக்க நீதிபதி உத்தரவு
சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வன யுத்தம் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வர விருக்கும் நிலையில், நக்கீரன் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
மனுவில், வீரப்பனைப் பற்றியும், அவனது வாழ்க்கை வரலாறு பற்றியும் நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். அதனை காப்புரிமை சட்டத்தின் படி பதிவும் செய்துள்ளேன். அதன்படி, வீரப்பனைப் பற்றி படம் எடுக்கும் முன்பு, படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னை அணுகி படம் எடுப்பது குறித்து தெரியப்படுத்தவில்லை. ஆனால் அதற்காக படத்திற்கு காப்புரிமை பிரச்சினையை எழுப்ப நான் விரும்பவில்லை.
முக்கியாக வன யுத்தம் படத்தில் வீரப்பனின் கதாபாத்திரத்தை மோசமானவராக சித்தரித்திருந்தால், அது வீரப்பனைப் பற்றிய தவறான எண்ணத்தை பரப்புவதற்கு சமமாகும். எனவே அப்படம் வீரப்பனை எவ்வாறு அடையாளப்படுத்தியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, படத்தை வெளியிடுவதற்கு முன்பு கோபாலுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்குமாறு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 17ம் தேதிக்குள் கோபாலுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை திரையிட தடை விதிப்பதாகவும் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வனயுத்தம்’ பட வழக்கு: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு
» வனயுத்தம்
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு
» வனயுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum