பொங்கல் வைக்க உகந்த நேரம்
Page 1 of 1
பொங்கல் வைக்க உகந்த நேரம்
தைத்திருநாளில் சூரியன் நாம் நவதானியங்கள் மூலம் நேரில் பார்க்கிறோம். அரிசி சந்திரனுக்குரியது. நவதானியங்களில் புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் நல்லது. அரிசியில் உடலின் அத்தியாவசிய சத்தான கார்போ ஹைட்ரேட் உள்ளது.
இவற்றை சூரியன் மற்றும் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வழிபட்டு சாப்பிடும் போது சகல நலன்களும் கிடைக்கிறது. பொங்கலை நாம் நல்ல நேரத்தில் வைக்க வேண்டும். அதற்கு உகந்த நல்ல நேரம்: நாளை காலை 7.25 மணி முதல் 8.25 மணி வரை, மதியம் 11 முதல் பகல் 1.30 மணி வரை. இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வீட்டில் ஆனந்தம் பொங்க வாழ்த்துக்கள்!
யோகம் தரும் மண்பானை பொங்கல்:
சமீப காலமாக பொங்கலை பெரும் பாலானவர்கள் குக்கரில் வைத்து தயாரிக்கிறார்கள். அல்லது அலுமினியம், பித்தளை, வெண்கலப் பாத்திரங்களில் பொங்கல் வைக்கிறார்கள். இது நல்லதல்ல. மண்பானையில் வைக்கும் பொங்கல் தான் உட லுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். மண்பானையின் சிறப்பை சிவன் தனது அடியார் திருநீலகண்டர் மூலம் உணர்த்தியுள்ளார்.
குயவர்கள் பொங்கல்பானை தயார் செய்வதற்கு முன்பு கடவுளுக்கு பூஜை போடுவார்கள். இப்படி முறைப்படி பூஜை போட்டு தயார் செய்யப்படும் மண் பானை பொங்கல் வழிபாட்டுக்கு மிகவும் நல்லது. களிமண்ணில் இருந்து தயாராகும் இப்பானையில் பொங்கல் செய்தால் அதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. களி மண்ணில் உள்ள சில சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
இது பற்றி நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த குயவர் கிருஷ்ணன் கூறும் போது, `பொங்கல் பானை நாங்கள் தயாரிக்கும் போது களிமண்ணை பிசைந்து முதலில் பூஜை போடுவோம். இந்த பானையை பயன்படுத்தும் குடும்பம் இறைவன் அருள் பெற்று செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று வேண்டுவோம். நாங்கள் சக்கரத்தில் வைத்து பானையை தயார் செய்யும் போது கூட அதை உருவாக்குவது இறைவன் தான். நாங்கள் அல்ல.
எனவே மண்பானையில் பொங்கல் வைத்தால் நம் வீட்டில் சூரிய பகவான் நிச்சயம் பிரவேசிப்பார். சகல வரங்களை வாரி வழங்குவார் என்றார். யோகஸ்ரீ மணிபாரதி கூறும் போது, `பொங்கல் அன்று மற்ற பாத்திரங்களை விட மண் பானையில் பொங்கலிடுங்கள். நிச்ச யம் அதன் பலன் உங்களுக்கு உடனே கிடைப்பதை உணரு வீர்கள்.
மண் பானையை கேஸ் ஸ்டவ் அடுப்பில் வைத்தும் பொங்கல் செய்யலாம். புது மண்பானையில் பொங்கல் செய்யும் போது மனதில் உற்சாகம் பிறக்கும். மனரீதியான ஒரு எழுச்சி, உத்வேகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புதுமண் பானை பொங்கல் புது சுவையையும், ஆனந்தத்தையும் அள்ளித் தரும். எனவே புது மண்பானையில் பொங்கல் செய்து சகல யோகங்களை பெற்று வாழ்வோம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
» பொங்கல் வைக்க உகந்த நேரம்
» வழிபாட்டுக்கு உகந்த நேரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum