தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்

Go down

 விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்  Empty விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்

Post  meenu Fri Mar 08, 2013 2:20 pm

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் சுக்ல பட்சம் சுவாதி நட்சத்திரம், சதுர்த்தி திதி வளர் பிறையில் வருகிறது. சதுர்த்தி திதி இரவு 9.14 வரை உள்ளது. நல் லது, கெட்டது என எந்த விஷயத்தி லும் முதலில் விநாயகரை வழிபடுகி றோம். இதனால் விநாயகர் சதுர்த்தி நாள் முழுவதுமே நல்லநாளே. இருந்தாலும் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் வழிபாடு நடத்தினால் மிகச்சிறப்பான பலனை பெறலாம். காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை யிலும், மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் கணபதி பூஜைக்கு உகந்த நேரம். இந்த நேரத்தில் பிள்ளையாருக்கு பிடித்த சுண்டல், கொழுக்கொட்டை, அருகம்புல் உள்ளிட்டவற்றை படை த்து, நெய்விளக்கேற்றி வழிபட்டால் தன விருத்தி, உத்யோக விருத்தி ஏற் படும் என்கிறது ஜோதிட உலகம்.

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே...

கணபதி வழிபாடு

‘மண்ணாலான என் உருவத்தை, பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து அலங்காரம் செய்து, பல புஷ்பங்களையும் கொண்டு முறையாக பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு அவர்கள் தொடங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்,’ என்று கணபதி தன்னை வழிபடும் முறையை கூறியுள்ளார். எனவே அவர் கூறிய முறையில் வழிபட்டு வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்.

9 கோளும் கணபதிக்குள் அடக்கம்

ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் என்று சொல் வார்கள். ஒன்பது கோள் களும் கணபதியின் திரு வருவுக்குள் அடக்கம் என் பது துறவிகள் வாக்கு. கண பதியின் நெற்றியில் சூரியன், தொப்புளில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், இடது தொடை யில் கேது, வலக்கை மேல் சனி, வலக் கை கீழ் புதன், இடக்கை மேல் ராகு, இட க்கை கீழ் சுக்கிரன், தலை யில் குருவும் இருக்கின்றனர்.

கணபதிக்கு பிடித்த அருகம்புல்

எதிர்ப்பவர்களை எரித்து சாம்பலாக்கும் வரம் பெற்ற அனலாசுரன் என்ற அரக்கனிடமிருந்து பூதகணங்களை காப்பாற்றும் முயற்சியில் கணபதி ஈடுபட்டார். உடனே அவரை பிடித்து விழுங்கினார். உடனே கணபதியின் வயிறு தகதகவென எரிந்தது. அலறித் துடித்த கணபதி மீது தேவர்கள் கங்கை நீரை ஊற்றினர். பணிப்பாறைகளை கொண்டு வந்து தலையில் வைத்தனர். எதுவும் நடக்கவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கணபதியின் தலையில் வைத்தார். உடனே அனலாசுரன் இறந்தான். அன்று முதல் கணபதியை பூஜிக்க விரும்பு பவர்கள் அருகம்புல் கொண்டு வணங்குவது வழக்கமாயிற்று.

21 படையல்

கரும்பு, அவரை, கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பணியா ரம், தினை மாவு, சோறு, கடலை, கிழங்கு ஆகியவை கணபதிக்கு பிடித்தவை.

அரசும், வேம்பும்

அரச மரமும், வேப்ப மரமும் பின்னி பிணைந்த இடம் விநா யகருக்கு மிகவும் பிடித்த இருப்பிடமாம். கணபதி வீற்றிருக்கும் அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது முன் னோர் வாக்கு. அரசமரம் சிவனாகவும், வேப்பமரம் அம்மையாகவும் விளங்க விநாயகர் பிள்ளையாக அமர்ந்து பிள்ளைப் பேறு வழங்குகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum