எஸ்ஜே சூர்யாவின் இசை படத்தின் முதல் போஸ்டர்
Page 1 of 1
எஸ்ஜே சூர்யாவின் இசை படத்தின் முதல் போஸ்டர்
இயக்குநரும், கதாநாயகனுமான எஸ்.ஜே. சூர்யா தற்போது இயக்கி வரும் படத்தின் பெயர் இசை. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் யார் தெரியுமா... ஒரு புதுமுக இசைக் கலைஞர்தான். அவர் சாட்சாத் எஸ்.ஜே. சூர்யாவேதான். அவரே இயக்கி, அவரே நடிக்கும் இசை படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் தனது கையில் கிடாரை வைத்துக் கொண்டு இசைப்பது போன்று ஸ்டில்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் பெயருக்கும், அவரது புதிய அறிமுகத்துக்கும் ஒன்று சேர்ந்தார் போல இந்த புகைப்படம் அமைந்துவிட்டது.
சும்மா ஏனோ தானோவென்று அவர் இசையமைத்துவிட வில்லை. இதற்காக அவர் 6 மாதம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார். அதன் பிறகே திரைப்படத்திற்கான பாடல்களை இசையமைக்க முடிவு செய்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வட இந்திய பெண் ஒருவர் நடிக்கிறார். விரைவில் இசையின் இசை வெளியீடு நடைபெறும். அதுவரை காத்திருப்போம்..
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யாவின் சிங்கம் - 2 படத்தின் மீது புகார்.
» இளையராஜாவாக பிரகாஷ்ராஜ்… ரஹ்மானாக எஸ்ஜே சூர்யா?
» இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!
» அசினுக்கு எதிராக கண்டன போஸ்டர்
» ஆபாச போஸ்டர் வழக்கில் சிக்குகிறார் நயன்தாரா!
» இளையராஜாவாக பிரகாஷ்ராஜ்… ரஹ்மானாக எஸ்ஜே சூர்யா?
» இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!
» அசினுக்கு எதிராக கண்டன போஸ்டர்
» ஆபாச போஸ்டர் வழக்கில் சிக்குகிறார் நயன்தாரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum