சூர்யாவுக்கு முன் கார்த்தி ஏன்? வெங்கட்பிரபு விளக்கம்
Page 1 of 1
சூர்யாவுக்கு முன் கார்த்தி ஏன்? வெங்கட்பிரபு விளக்கம்
மங்காத்தா இயக்குநர் வெங்கட்பிரபுவின் அடுத்த இயக்கத்தில் சூர்யாவை வைத்து 3டி படம் ஒன்று உருவாக திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் வெங்கட்பிரபு செய்து வந்தார். ஆனால் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது கார்த்தியை வைத்து பிரியாணி படம் இயக்க மும்முரமாக உள்ளார்.
ஏன் அண்ணன் படத்தை நிறுத்திவிட்டு தம்பியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவரை கேட்டோம். நமக்கு ஏதாவது சுவையான தகவல் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்போடு.
அவர் நம்மை பார்த்ததுமே புரிந்து கொண்டார் ஏதோ விவகாரம் தேட வந்திருப்பதை. ஆனால் அதை எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நமக்கு பதில் கூறினார்.
"தற்போது சூர்யா மாற்றான், சிங்கம் 2 படங்களில் பிசியாக உள்ளார். அந்த படங்கள் முடிய சில காலம் ஆகும். அதனால்தான் 3டி படத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கார்த்தியுடன் பிரியாணி படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டேன். சூர்யா அந்த இரண்டு படங்களையும் முடித்தவுடன் அவருடைய படத்தை இயக்குவேன்" என்றார்.
வேறு ஏதேனும் சுவையான தகவல் இல்லையா என்று கேட்டதற்கு, பிரியாணி மிகச் சுவையாக தயாராக உள்ளது. ஆக்ஷன், காமெடி, காதல் என பல சுவைகளை சேர்க்க உள்ளோம். நிச்சயம் சுவையான விருந்து உங்களுக்கு இருக்கிறது என்றார் சிரித்தபடி.
சரி இதற்குமேல் பிரியாணியை எவ்வளவு கிண்டுவது என்று விட்டுவிட்டு வந்துவிட்டோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி
» சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி
» வெங்கட்பிரபு-வுடன் இணையும் கார்த்தி
» ப்ரியாணி மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கும கார்த்தி-வெங்கட்பிரபு கூட்டணி
» சூர்யாவுக்கு வில்லனான சச்சின்?!
» சூர்யாவுக்கு வாய்ஸ் தந்த கார்த்தி
» வெங்கட்பிரபு-வுடன் இணையும் கார்த்தி
» ப்ரியாணி மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கும கார்த்தி-வெங்கட்பிரபு கூட்டணி
» சூர்யாவுக்கு வில்லனான சச்சின்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum