தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம், சூர்யா, ஆர்யாவைத் தொடர்ந்து விஷால்...

Go down

விக்ரம், சூர்யா, ஆர்யாவைத் தொடர்ந்து விஷால்... Empty விக்ரம், சூர்யா, ஆர்யாவைத் தொடர்ந்து விஷால்...

Post  ishwarya Mon Mar 25, 2013 5:27 pm



தேசிய விருது இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க எந்த நடிகருக்குத்தான் கசக்கும். அதிலும், பாலாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு கதாநாயகனை ஒரு படத்தில் இயக்கிவிட்டால், மறுபடியும் அவருடன் சேர்ந்து இன்னொரு படம் இயக்கிவிடுவார்.

அந்த வகையில், விக்ரம் (சேது, பிதாமகன்), சூர்யா (நந்தா, பிதாமகன்), ஆர்யா (நான் கடவுள், அவன் இவன்) வரிசையில் தற்போது பாலா விஷாலை வைத்து இரண்டாவது படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

அவன் இவன் படத்தில் விஷாலை வைத்து இயக்கிய பாலா, தற்போது மற்றொரு படத்தை உருவாக்க மிகவும் தீவிரமாக உள்ளார். தற்போது பாலா இயக்கி வரும் பரதேசியை முடித்துவிட்டு விஷாலை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதேப்போல விஷாலும் தற்போது நடித்து வரும் சமர் மற்றும் மத கஜ ராஜா படங்களை முடித்துவிட்டு பாலா படத்தில் நடிக்க விருக்கிறார்.

நமக்கு ஒரு தேசிய விருது படம் நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum