தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜை வழிபாடு

Go down

பூஜை வழிபாடு Empty பூஜை வழிபாடு

Post  meenu Fri Jan 18, 2013 1:08 pm

குடும்பத்தில் ஒரு மணி சத்தம் கேட்க வேண்டும். நீங்கள் சுருக்கமாய் 10 நிமிடம் பூஜை செய்தாலும் சரி. ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் என்று 5 மூர்த்திகள் வைத்துச் செய்கிற பூஜை பஞ்சாயதன பூஜை.விருப்பப்பட்டால் இயற்கையில் கிடைக்கக் கூடிய 5 வஸ்துக்களில் ஆவாகனம் செய்து கொண்டும் பூஜிக்கலாம்.

வெளியூர் செல்கிறவர்கள் 5 மூர்த்திகளுடன், துளசி வில்வ பத்திரங்கள் (உலர்த்தியது), திராட்சை அட்சதை இவற்றை ஒரே கலசத்தில் போட்டும் எடுத்துச் செல்லலாம். வில்வம், துளசி கொண்டு சிவவிஷ்ணுவை அர்சனை செய்யலாம். மற்ற தெய்வங்களுக்கும் அட்சதையைப் பயன்படுத்தலாம். மனசு இருந்தால் எல்லாரும் எங்கேயும் பூஜை செய்யலாம்.

வீட்டில் பூஜை என்றால் மகாநைவேத்தியம் (அன்னம்) காட்டுவது அவசியம். ஈசுவரன் நமக்கென்று பல சவுகர்யங்களை உலகத்தில் உண்டு பண்ணியிருக்கிறார். அவற்றை அனுபவிக்கிற உரிமைகளை நமக்குத் தந்திருக்கிறார். நாம் அனுபவிக்கிற சவுகர்யங்களை அவருக்கு சமர்ப்பித்த பின்பே உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

நிவேதனம் என்றால் அதை ஸ்வாமி சாப்பிட்டு விடுவதாய் எண்ணிக் கொள்ளக்கூடாது. நிவேதயாமி என்ற பதத்துக்கு அறிவிக்கிறேன் என்று அர்த்தம் இந்த வேளை உன் கருணையால் எனக்கு அன்னம் கிடைத்தது என்று தெரிவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

கல்லோ மண்ணோ செம்போ நாம் எதில் இருக்கச் சொன்னாலும் அதில் இருப்பான். எந்த வடிவத்தில் காண விரும்புகிறோமோ அந்த வடிவத்தில் நிற்பான். வைதிக மதத்துக்கு காரண புருஷர் வியாச மகரிஷி.முனிவர்களில் நான் வியாசர் என்று கிருஷ்ணபகவானே கீதையில் சொல்லியிருக்கிறார்.

இவர் தான் மகாபாரத்தை லோகத்துக்கு வழங்கி உபகாரம் செய்தவர். மகாபாரத்தை பஞ்சமோவேத ஐந்தாவது வேதம் என்று சிறப்பித்துக் சொல்வார்கள் பாகவதமும் வியாசர் தந்தது தான். "கு" என்றால் இருட்டு "ரு" என்றால் விலக்குவது குருவானது அஞ்ஞான இருளை நீக்குகிறவர். நம் எல்லோருக்கும் குருபக்தி மிகவும் அவசியம்.

சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிற பௌர்ணமியன்று வியாச பூஜை செய்யப்படுகிறது. இது தமிழ் மாதத்தில் ஆனியில் வரும். இந்தப் பௌர்ணமிக்கே வியாச பூர்ணிமை என்று பெயர். வடக்கே வியாச பூர்ணிமையை குரு பூர்ணிமா என்கிறார்கள்.

அன்று குருவுக்குக் காணிக்கை செலுத்துவது வழக்கம். எல்லாவற்றிலும் சிறந்த காணிக்கை இருதயத்தை அர்ப்பணிப்பது தான். வியாச என்றால் பகுத்து வைப்பது. வியாசர் வேதத்தை நாலாகப் பகுத்து வைத்தார். தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என்றாலும் பேசாத குரு.

பகவான் நாராயணன் தான் பேசி உபதேசிக்கிற குரு. தகப்பனார் பிள்ளை என்கிற குரு பரம்பரை நாராயணனில் தொடங்கி வியாசரின் பிள்ளை சுகர் என்பவோடு முடிகிறது. பிறகு குரு சிஷ்யர் என்கிற சந்நியாச பரம்பரையில் ஆசார்யார்கள் வருகிறார்கள். சுகருடைய சிஷ்யரான கௌடபாதரில் தொடங்கி, சங்கரருடைய சிஷ்யர்கள், சங்கர பீடத்தில் அமரும் ஆசார்யர்கள் என்று அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.

வியாசர் கூறுவார் நியம ஆசாரங்களோடு வேதங்களைக் காப்பாற்றச் சிலரால் தான் முடியும். ஆனால் வேதத்தின் தாத்பர்யமான அகிம்சை,சத்யம், தர்மம் முதலிய விஷயங்களை சகலஜனங்களும் தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று. நாம் ஒவ்வொருவரும் தத்துவங்களில் பிரிந்திருக்கிறோம்.

பிரிந்திருப்பதால் தோஷமில்லை. ஒரு மரத்தின் பல கிளைகள் ஒவ்வொரு திசையில் வளர்ந்து கொண்டிருக்கும்.அதனால் அவை ஒன்றில்லை என்றாகி விடுமோ நம்முடைய கிளைகள் வேறாயிருக்கலாம், ஆனால் வேர்கள் ஒன்றுதான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum